பக்கம்:ஞான மாலை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - ஞான மாலை கிறது. இப்போது பார்த்தது எழுத்து வகை, இனிப் பொருள் வகையில் பிரணவத்தின் கினைப்பு இந்தத் தொடரில் அமைந்திருப்பதைச் சற்றே ஆராய்வோம். பிரணவமே மயில் ஆண்டவன் பவனி வரும்போது மயில் தோகையை விரித்து கிற்கும். தோகை விரிந்த மயில் மீதே ஆண்டவன் எழுந்தருளி அன்பர்களுக்கு,அருள் செய்வான். அவன் சங்கிதானத்தில் தனியே மயில் கின்ருல் தோகை விரியாமல் குவிந்திருக்கும். இங்கே ஆடும் பரி என்று சொன்னமையில்ை தோகையை விரித்து ஆடுகின்ற மயிலேயே அருணகிரியார் கினைக்கிருர் என்று தெரியவரும். ஆடுகின்ற மயில் முருகனையும் தன்மீது கொண்டே ஆடுகிறது. - 'மயிலும் ஆட நீயும் ஆடி வரவேணும்' என்பது திருப்புகழ். & 'செஞ்சிறிய கால்வி சாலத் தோகை துங்க அநுகூல பார்வைத் தீரச் செம்பொன் மயில்' என்பது மற்ருெரு திருப்புகழ். - மயில் ஒரு காலேத் தூக்கிக்கொண்டு ஆடும். விரிந்த தோகையுடன், தூக்கிய ஒரு காலுடன் ஆடும் மயிலைப் பார்த்தால் தமிழில் உள்ள ஓ’ என்ற எழுத்தின் வடிவமாகத் தோன்றும். ஆடுகின்ற மயில் ஓங்காரத்தை கினப்பூட்டுகிறது. அது பிரணவத்தின் உருவம் என்று அருணகிரிகாதப் பெருமான் பாடுகிருர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/132&oldid=855738" இலிருந்து மீள்விக்கப்பட்டது