பக்கம்:ஞான மாலை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஆன. திணிமந்த்ர ரூப நிலைகொண்ட தாடு மயில் என்ப தறியேனே" - என்கிருர். எல்லா மந்திரங்களையும்விட ஒப்பற்றதாக அமைந்த பிரணவமாகிய மந்திரத்தின் உருவத்தை கிலேயாகக்கொண்டது ஆடுகின்ற மயில் என்பதை அடியேன் தெரிந்துகொள்ளவில்லையே' என்பது அதன் பொருள். ஓங்காரம் ஒலியாகவும் ஒளியாகவும் இருக்கும். ஒலியும் ஒளியும் கலந்த அதனுள்ளே இறைவன் எழுந்தருளியிருக்கிருன். "ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு துங்கார்' - - என்பது கந்தர் அலங்காரம். சோதி வீசும் மயில் மேல் முருகப்பெருமான் எழுந்தருளி யிருப்பது ஓங்காரத்தினுள்டே அவன் இருப்பதைக் காட்டுகிறது என்று கண்டோம். ஆடும் பரியை கினைக்கின்ற அருணகிரியார் அதனுல் குறிக்கின்ற பிரணவத்தை யும் உள்ளத்துள் தியானம் செய்தவர் ஆகிருர். இப் படி எழுத்திலும், பொருளிலும் பிரணவத்தின் உட் யோகம் முதல் பாட்டின் தெர்டக்கத்தில் அமைந்து விட்டது. . . . . . . . . . . ஆடும் பரி, என்பது அந்தத் தொடக்கம். அடையில்லாச் சிறப்பு இறைவனுடைய மயிலயும், வேலையும், சேவலை யும் சேர்த்துச் சொல்வது ஒரு மர்பு. ஆடாத மயிலைக் காட்டிலும் ஆடும் மயில் அழகில் சிறந்தது. ஆதலின் ஆடும் பரி என்ருர் சேவல் வெற்றிக்கொடி. முருகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/133&oldid=855740" இலிருந்து மீள்விக்கப்பட்டது