பக்கம்:ஞான மாலை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - - ஞான LDTడి பெருமானுடைய திருக்கோயிலில் அது அழகு செய் கிறது. அணி சேவல் - அழகு செய்யும் சேவல். ஆடும் மயில், அணி சேவல் என்று மயிலுக்கும் சேவலுக்கும் அடை கொடுத்துச் சொன்னர் அருண கிரியார். - ஆடும் பரி வேல் அணி சேவல். நடுவில் வேல் என்பதற்கு மாத்திரம் ஓர் அடையும் இல்லாமல் சும்மா வேல் என்று சொன்னர். வேலா யுதத்திற்குப் பல வகையான அடைகள் கொடுக்க வாய்ப்பு உண்டு. 'வீரவேல் தாரைவேல் விண்ணுேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் - தொளத்தவேல் உண்டே துணை' என்று வேலின் சிறப்பைப் பாடின புலவர் உண்டு. இங்கே அருணகிரிநாதர் எந்த அடையும் சொல்லா மல் சும்மா வேல் என்று சொன்னர். முன்னும் பின் னும் உள்ள பொருள்களுக்கு அடை கொடுத்தவர் வேலை நடுநாயகமாக வைத்து எந்த அடையும் சொல்லாமல் சொன்னதில் ஒரு சிறப்பு இருக்கிறது. சிறப்புடைய பொருள்களுக்குப் பலபல அடை யாளங்கள் சொல்லவேண்டியது இல்லை. அடை யின்றி வழங்குவதே அந்தப் பொருளின் சிறப்பைப் புலப்படுத்தும். திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற நூலின் முதல் பாட்டில் மணிவாசகப்பெருமான் காட்சி என்னும் துறையை அமைக்கிருர். தலைமகன் தலைமகளைக் கண்டு கூறுவதாக அமைந்தது அந்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/134&oldid=855742" இலிருந்து மீள்விக்கப்பட்டது