பக்கம்:ஞான மாலை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 117 யாட்டு. அவளே ஒரு கொடி என்று கினைத்து அவன் சொல்கிருன். 'திருவளர் தாமரை சீர்வளர் காவிக ரீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காக்தள்கொண்டோங்குதெய்வ மருவளர் மாலிையோர் வல்லியின் ஒல்கி அனகடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் ருெளிர்கின்றதே." இந்தப் பாட்டில் அந்தத் தலைவியினுடைய அங்கங் களே மலர்களோடு ஒப்பிட்டுச் சொல்கிருன். மற்ற மலர்களுக்கு அடை கொடுத்துவிட்டு, கோங்கு என் பதை எவ்வித அடையும் இல்லாமல் சொல்கிருன். கோங்கு என்பது இங்கே பருவத்தைக் காட்டும் நகி லேக் குறித்தது. பருவ மங்கையின் சிறப்புக்கு அடை யாளமாகிய உறுப்பு ஆதலின் அதை அடையின் றியே சொன்னர் என்று அதன் உரை ஆசிரியர் எழுதுவர். மகளிர்க்கு உறுப்பில் சிறந்த உறுப் பாகிய முலைக்கு உவமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடை கொடுக்கக் கடவதன்ருே எனின், அடை கொடுப்பின் பிற உறுப்புகளுடன் இதனையும் ஒப்பித்ததாம்; ஆகலான் இதற்கு அடை கொடா மையே முலைக்கு ஏற்றத்தை விளக்கி நின்றது" என் கிருர். - - ஓர் ஊருக்குப் போகிருேம். அங்கே நூறு ரெட்டியார்கள் வாழ்கிருர்கள். எல்லோருக்கும் ரெட்டி யார் என்பது பொதுவான அடையாளப் பெயராக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பெயர் இருக்கும். இராமசாமி ரெட்டியார், கிருஷ்ண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/135&oldid=855744" இலிருந்து மீள்விக்கப்பட்டது