பக்கம்:ஞான மாலை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஞான ιοπ&υ சாமி ரெட்டியார், சீதாராம ரெட்டியார் என்று வெல் வேறு பெயர்களோடு இருப்பார்கள். ஆணுல் அவர் களுக்குள் மிகவும் பணக்காரர், எல்லோரும் அறிந்தவ ராக உள்ளவர் சீதாராம ரெட்டியார் என்று வைத்துக் கொள்வோம். அவர் மிகச் செல்வாக்கு உள்ளவரா 1ல்ை அந்த ஊருக்குச் சென்று ரெட்டியார் என்ருல் எல்லோரும் சீதாராமரெட்டியாரையே கினேப்பார்கள். ரெட்டியார்கள் பல பேர்களாக இருந்தாலும் அடை சொல்லாமல் ரெட்டியார் என்ற அளவில் குறிக்கும் படியாகப் பெரிய சிறப்பு உடையவர் அவர். திருக்கோயிலில் ஆண்டவன் நடுநாயகமாக விளங்குகிருன். அங்கே உள்ள ஒவ்வொன்றுக்கும் திரு என்ற அடைமொழி கொடுத்துத் திருக் கோயில், திருவாயில், திருமதில் என்று சொல் கிருேம். ஆளுல் இறைவனைத் திருச்சாமி என்று சொல்வது இல்லை. திருகாயனர் என்று அடை கொடுத்துச் சொல்வதில்லை. சுவாமி, இறைவன், காயனர் என்று சொல்வதே அவன் சிறப்பை விளக் கும். இந்த முறையில் மயிலையும் சேவலையும் ஆடும் பரி என்றும், அணிசேவல் என்றும் அடை கொடுத் துச் சிறப்பித்த அருணகிரியார் வேலுக்கு அமைந்த இயற்கைச் சிறப்பை எண்ணி எந்த அடையையும் கொடுக்காமல் விட்டுவிட்டார். வேலின் பெருமை. - வேலின் பெருமை விளக்கவொண்தைது. ஆண் டவன் திருக்கரத்தில் எப்போதும் இருப்பது, அது. இறைவன் எழுந்தருளும்போது மயில் பெருமை ப்ெறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/136&oldid=855745" இலிருந்து மீள்விக்கப்பட்டது