பக்கம்:ஞான மாலை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 119 கிறது. வெற்றி அடைந்து கிற்கும்போது சேவல் கொடி சிறந்து கிற்கிறது. ஆளுல் எல்லாக் காலத் திலும் இண்றவன் கையில் அழகிய வடிவேல் இலங்கு கிறது. - முருகப்பெருமான வணங்குகிறவர்கள் வேலா யுதத்தில் ஆண்டவனே ஆவாகனம் பண்ணி வழி படுவது உண்டு. வேலையே முருகப்பெருமாளுகக் கோயிலில் வைத்து வழிபடும் வழக்கம் இந்த காட்டில் இருக்கிறது. பழங்காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் முருகப்பெருமான் கோயில் இருந்தது. அங்கே வேலை கட்டு அதற்கே பூசை செய்து வந்தார்கள். அதனுல் அதை இளங்கோவடிகள், வேற்கோட்டம்’ என்று சொல்கிருர். யாழ்ப்பாணத்தில் கல்லூர் என்ற இடத்திலும் செல்வச் சங்கிதி என்ற இடத்திலும் திருக் கோயிலில் வேலையே கட்டு முருகனுக வழிபடுகிருர் கள். முருகப்பெருமானுக்கு ஆறுமுகம் இருப்பது போல வேலுக்கும் ஆறு பட்டை உண்டு. . . முருகனிடம் இருக்கிற வேலைத் தரிசனம் செய். தோமால்ை அடிமுதல் முடிவரையிலும் செல்லும் போது இறைவன் அடிமுதல் முடிவரையில் பார்த்துச் செல்லும்படியாக அந்த வேல் அமைந்திருப்பதைக் காணலாம். வேல் சோதியுள் சோதியுள் சோதியாக விளங்குவது. மயில் ஓங்காரமாகிய ஒளி படைத்த பெரும் சோதி. அதன் உள்ளே சோதியாக முருகப் பெருமான் விளங்குகிருன். அவன் உள்ளே சோதி வேல். மின்னல் கீற்றுப் போல அதனைத் தியானம் பண்ணுகிறவர்களுக்கு அந்தச் சிறிய சோதியே. விரிந்த பெரும் சோதி தரிசனத்தைப் பெற வைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/137&oldid=855747" இலிருந்து மீள்விக்கப்பட்டது