பக்கம்:ஞான மாலை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

但忍G ஞான மாலை ஞான சக்தி வேல் ஞான சக்தியின் வடிவம். முருகப்பெரு -மான் ஞானபண்டித சாமி. அவன் திருவுருவமே ஞான வடிவம். - நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்' என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரியார் பாடு வார். ஞானமே வடிவமான முருகப்பெருமானுடைய உறுப்பாகிய திருவடியும் ஞானம்ே உருவானது. அவளுேடு சார்த்திய உறுப்பாகிய வேலும் ஞானமே வடிவமானது.அதனைத் தியானிப்பவர்கள்முருகப்பெரு மானைத் தியானிப்பதஞல் அடையும் பயனைப் பெறு கிருர்கள். இத்தனை வகையான சிறப்புடைய அந்த வேலே நடுநாயகமாக வைத்து, அடை கொடுக்காமல் அதன் சிறப்புப் புலப்படும்படி செய்தார் அருண கிரியார். - -

  • ஆடும் பரி வேல் அணி சேவல் எனப்

பர்டும் பணியே பணியாய் அருள்வாய். அவற்றைப் பாடுவதே பணியாக இருக்க வேண்டுமென்ருல், வேறு வேலை ஒன்றும் இல்லையா தோன்றும், u Sof ஒரு தாசில்தார் இருக்கிருர், உத்தியோகத் தைத் தவிர அவருக்கு வேறு இரண்டாவது வேலை கிடையாது என்று சொல்கிருேம். அப்படிச் சொன் ஞல் என்ன பொருள்? அவர் சாப்பிடுகிறது. இல்லையா? பந்து விளையாடப் போகிறது இல்லையா? அந்தக் காரியங்களே எல்லாம் அவர் செய்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/138&oldid=855749" இலிருந்து மீள்விக்கப்பட்டது