பக்கம்:ஞான மாலை.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 125 என்று பாடுகிருர். விநாயகப்பெருமானுடைய சிறந்த வீரத் திருவிளையாட்டை இந்த அடிகளில் வைத்திருக் கிருர், கயாமுகாசுரன் என்பவன் உலகத்திலுள்ள மக்களுக்கும் தேவர்களுக்கும் துன்பத்தைச் செய்து வந்தான். அந்த அசுரனே அழித்து யாவருக்கும் இன் பத்தை உண்டாக்கினர் கரிமுகவர். புராணக் கதை களுக்கு உள்ளுறை ஒன்று இருக்கும் என்பதைப் பல சமயங்களில் காம் பார்த்து வருகிருேம். இங்கே இங் தக் கயமுகாசுரன் கதையிலும் உள்ளுறை ஒன்று இருக்கிறது. , , - " - * . நம்முடைய சமயத்தில் சில சில பொருள்களே ச் சில சில உணர்ச்சிகளுக்கு அடையாளமாகச் சொல் வார்கள். யானே என்பது அகங்காரத்திற்கு அடை fj | ff É T l_i}, . - 'ஆங்கார மென்னுமத யானையை' . என்பர் தாயுமானவர் ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தி கடைசியில் போவது ஆணவமலம். ஆணவமலத்தின் வாசன அருதவரைக்கும் ஆன்மா இறைவன் திருவருள் இன்பத்தைப் பெற இயலாது. அதுதான் மிகமிக வலிமையான மலம், அதனை யான்யாக உருவகிப்பது ஒருவழக்கம். யானையை யானையால் பிடிக்கவேண்டும். இது ஒரு முறை. , , 'யானையால் யானையாத் தற்று' * .ーズ என்பது திருக்குறள். ஆணவம் மிக்க ஆன்ம்ா. விடத்தில் ஞானம் புகுந்தால் ஆணவம் ஓடிவிடும். ஞானத்தையும் ஆனயாகச் சொல்வது வழக்கம். ஞானத்தின் திருவுருவமே விநாயகப்பெருமான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/143&oldid=855760" இலிருந்து மீள்விக்கப்பட்டது