பக்கம்:ஞான மாலை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.1 26 ஞான மாலே அகங்காரமாகிய யானையைப் போக்க நாம் ஞான யானையை வழிபடவேண்டும். கயாமுகாசுரன் அகங் காரத்தின் உருவம். கயமுகக் கடவுள் ஞானத்தின் உருவம். 'ஐந்து கரத்தனே யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே." என்று திருமந்திரத்தில் திருமூலர் பாடுகிருர். அங்கே -ஞானக் கொழுந்தினே' என்று சொல்கிருர். ஞான பண்டித சாமியினுடைய பெருமையைப் பாடவேண் டும்; அவனுடைய அங்கங்களைப் பாடவேண்டும்' என்று சொன்ன அருணகிரிநாதர் ஞானமே வடிவமாக கிற்கும் விநாயகப் பெருமானே இரண்டாம் முறையாக கினைக்கிருர். .. அண்ணனும், தம்பியும் ஞானத்தின் திருவுரு வங்கள். தன்னை வாழ்த்துவாருக்கு கன்மை உண்டாக்குகின்ற சிறப்புள்ள யான ஆதலின் தனி யானை . . . என்று சொன்னர். கயமுகாசுரன் எங்கே இந்திரியங் களுக்குக் சுகம் இருக்கிறது என்று தேடிக்கொண் டிருந்தான். கொள்ளைக்காரன், எங்கே பொருள் இருக் . . . கிறது என்று தேடுவதுபோல, அந்த அசுரன் தேவலோகத்திலும் பூலோகத்திலும் இன்பம் உள்ள இடங்களிலும் வாழ்வு பெற்ற மக்களையும் சிறந்த கிலே யில் வாழும் அமரர்களையும் அழிப்பதற்காகத் தேடிச் சென்ருன், அதனுல், - - - தேடும் கயமா முகனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/144&oldid=855763" இலிருந்து மீள்விக்கப்பட்டது