பக்கம்:ஞான மாலை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உாடும் பணி 127 என்ருர். அப்படித் தேடிக்கொண்டிருந்த அசுரனே கயமுகக் கடவுள் நாடிச் சென்று கொன்ருர். மறை வாகக் கொல்லவில்லை. ஆயிரம் பேருக்கு கடுவில் போர்க்களத்தில் அவனைக் கொன்ருர், - * - செருவில் சாடும் தனி யானை சகோதரனே! புகு முகம - உலகத்தில் எங்கே இன்பமும் வளமும் இருக் கின்றனவோ அவற்றை யெல்லாம் தேடிச் சென்று அழித்தான் கயமுகாசுரன். அவனே காடிச் சென்று போர்க்களத்தில் கயமுகக் கடவுள் சங்காரம் பண்ணி ஞர். இந்தக் கதையும், இந்த வெற்றியோடு இருக்கிற திருவுருவமும் ஆணவத்தோடு கூடிய ஆன்மாவுக்கு அந்த ஆணவத்தை அழித்தொழிக்கின்ற ஞானத் தைத் தருகின்ற பெருமான் விநாயகக் கடவுள் என் னும் தத்துவத்தைத் தெரிவிக்கின்ற அடையாளங் களாக உள்ளன. அத்தகைய பெருமானுக்குத் தம் பியே என்று புகுகிருர் அருணகிரியார். ஞான வாரணத்தின் சகோதரனுகிய எம்பெரு மானே! உனக்கு வாகனமாக கின்று ஆடுகின்ற மயிலையும், ஞான சக்தியாகிய வேல்ையும், உன் னுடைய வெற்றியின் அடையாளமாக நீ இருக்கும் இடத்திற்கு அழகு செய்கின்ற சேவலையும் பாடு கின்ற கைங்கரியத்தையே என் வாழ்க்கைச் செய லாகத் திருவருள் பாலிக்கவேண்டும்” என்று பிரார்த்தனை செய்கிறர். ー・ ・ ・・・。-ミー

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/145&oldid=855765" இலிருந்து மீள்விக்கப்பட்டது