பக்கம்:ஞான மாலை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 ஞான மாலை இந்தப் பாட்டில் முதல் அடியில் இறைவனுடைய, அங்கங்களின் சிறப்பையும், இரண்டாவது அடியில் அவனைப் பாடும் பணியையும் பின் இரண்டுஅடிகளில் விகாயகருடைய திருவிளையாடல்களையும், முருகன் அவனுடைய சகோதரன் என்பதையும் கூறினர். இறைவனே அவனுடைய அங்கங்களுடன் தரிசனம் செய்து அந்த அங்கங்களைப் பாடுவதால் நமக்கு ஞானம் உண்டாகும் என்பது இப் பாடலின் கருத்து. - r ஆடும் பரிவேல் அணிசே வல்எனப் பாடும் பணியே பணியா அருள்வாய், தேடும் கயமா முகனேச் செருவில் சாடும் தனியா கனசகோ தரனே! தீங்கு புரியும் பொருட்டு கல்லோர்களைத் தேடிய கயமுகாசுரனைப் போர்க்களத்தில் அழித்த ஒப்பற்ற யானையாகிய விநாயகப் பெருமானுடைய சகோதரனுகிய முருகப் பெருமானே! உனக்கு வாகன மாக கின்று ஆடும் மயில், உன் படையாகிய வேல், அழகு செய்கிற சேவல் என்று சொல்லி அவற்றைப் பாடும் திருப்பணியையே என் வாழ்க்கைச் செயலாக அருள் பாலிப்பாயாக! ^ -- என - என்று சொல்லி. பணியா - பணியாக். சகோதரனே (எனக்கு) அருள்வாயாக என்று முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/146&oldid=855767" இலிருந்து மீள்விக்கப்பட்டது