பக்கம்:ஞான மாலை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 . ஞான மாலே அந்த வகையில் முதல் கிலமாகிய குறிஞ்சிக் குத் தெய்வம் முருகன்; பாலைக்குத் தெய்வம் காளி; முல்லைக்குத் தெய்வம் திருமால், மருதத்திற்குத் தெய்வம் இந்திரன்,நெய்தலுக்குத்தெய்வம் வருணன். சைவர்கள் கும்பிடுகிற முருகனும்,வைணவர்கள் கும்பி டுகிற திருமாலும்குறிஞ்சி,முல்லை இவற்றுக்குரியதெய் வங்களாக விளங்குகிருர்கள். இலக்கணம் செய்தவர் கள் சைவர்களாகவும் இருப்பார்கள்; வைணவர்களாக வும் இருப்பார்கள், அவர்கள் இந்த வரையறையை மாற்றுவது இல்லை. அதைவிடப் பெரும் சிறப்பு ஒன்று உண்டு அகப்பொருள் இலக்கணத்தை ஜைனரும் பெளத்தரும் இயற்றியிருக்கிருர்கள்.கிறிஸ் துவரும் இயற்றியிருக்கிருர். அவர்களும் அந்த அந்த கிலத்திற்கு, முன்னலே உள்ள தெய்வங்களேயே தெய்வங்களாகச் சொல்லியிருக்கிருர்கள். ஜைன மதத்தைச் சேர்ந்த நாற்கவி ராச நம்பி என்பவர் அகப்பொருள் விளக்கம்' என்ற நூலே இயற்றியிருக் கிருர். அதிலும் குறிஞ்சிக்குத் தெய்வம் முருகனே. முல்லைக்குத் திருமாலே. அதுபோல வீர சோழியம் என்ற நூலே இயற்றிய புத்தமித்திரர் என்ற பெளத்த ரும் சொல்லியிருக்கிருர். பிற்காலத்தில் இதாலி நாட் டிலிருந்து வந்த கிறிஸ்துவராகிய வீரமாமுனிவர் தொன்னூல் என்னும் இலக்கண நூலே இயற்றினர். அதில் அகப்பொருள் பற்றிய பகுதியில் குறிஞ்சி முதலிய திணைகளுக்கு முருகன் முதலிய தெய்வங் களையே சொல்லியிருக்கிருர். அவர்கள் தங்கள் தங்களுடைய சமயத்தெய்வங்களை வைத்துச்சொல்லி யிருந்தாலும் யாரும் அடிக்கப்போவதில்லை ஆலுைம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/20&oldid=855782" இலிருந்து மீள்விக்கப்பட்டது