பக்கம்:ஞான மாலை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஞான மாலே யும், வீரச் செயல்களும், படைகளும், ஊர்தி, கொடி முதலியனவும் பல்வேறு புலவர்களால் பாராட்டப் பெறுகின்றன. மிகப் பழங்காலம் தொட்டே முருக வழிபாடு இந்த காட்டில் வெவ்வேறு வகையில் இருந்து வருகிறது. இடத்திற்கு இடம் மக்களுடைய வசதிக் கும்.நாகரிகத்துக்கும், பண்பாட்டுக்கும் ஏற்றபடிஅவன் வழிபாடுகள் இரு ங் து வ ங் த ன. அவனுடைய ஆறெழுத்தை உச்சரித்து, பிரம்மசரியம் காத்து, தவம் கிறைந்தவர்களான அந்தணர்கள் போற்றி வந்தார்கள். ஊரில் உள்ள மக்கள் விழாவெடுத்துக் கும்பிட்டார்கள். குறிஞ்சி கிலத்தில் உள்ள குறவர் கள் ஆட்டை வெட்டி, இரத்தம் கலந்த தினை அரிசியை வைத்து வழிபட்டார்கள். முருகனுடைய வழிபாடு மிக உயர்ந்தபண்பாடு உடையவர்களிடமும் இருந்தது; தாழ்ந்த வாழ்க்கை உடையவர்களிடமும் இருந்தது. அவன் சத்துவ குணமுடைய முனியுங்க வர்களிடையே பெரும் கடவுளாக விளங்கினன்; புலால் உண்ணுகின்ற மக்களிடையேயும் வீரப் பெருங் கடவுளாக விளங்கினன். பிற்காலத்தில் முருகப்பெருமானுடைய வழிபாடு பின்னும் விரிவாகியது. முருகனைப் பற்றிய நூல்கள் அளவுக்கு மிஞ்சி எழுந்தன. வட மொழியில் உள்ள கந்தபுராணத்தைக் கச்சியப்ப சிவாசாரியார் தமிழில் மொழி பெயர்த்தார். மகாபுராணங்கள் பதினெட்டு ஆகும். அவற்றுள் கந்தபுராணம் மிகப் பெரியது. அதில் எல்லா மூர்த்திகளுடைய புகழும் வருகின்றன. முருகப்பெருமானுடைய திரு அவதாரம் முதலியவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/22&oldid=855786" இலிருந்து மீள்விக்கப்பட்டது