பக்கம்:ஞான மாலை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலை 5 ஒரு பகுதியில் இருக்கின்றன. தமிழ்க் கந்தபுராணம் அந்தப் பகுதியில் உள்ளவற்றையே சொல்கிறது. முருக பக்தி ஆழ்வார்களும் நாயன்மார்களும் திருவவ தாரம் செய்தபிறகு திருமால் பக்தியும் சிவ பக்தியும் தமிழ் காட்டில் முன்பு இருந்ததைவிட மிகுதியாகப் பரவின. அதுபோலவே அருணகிரிநாதப் பெருமான் திருவவதாரம் செய்து திருப்புகழையும் பிற தோத் திர நூல்களையும் அருளிச் செய்த பிறகு முருக பக்தி தமிழ் காட்டில் வெள்ளமாக ஓடியது. இன்று அந்த வெள்ளம் பின்னும் பெருகிக் கடல் மடை திறந்தாற். போல எங்கும் பரவி நிற்கின்றது. முருகன் என்றைக்கும் உள்ள கடவுளாக இருங் தாலும், அவனுடைய திருவருள் அநுபவம் பெற்று, தாம் பெற்ற அநுபவத்தைப் பிறரும் அடைய வேண்டுமென்ற கருணைப் பெருக்கினுல் அருமை யான நூல்களைச் செய்த பெரியவர்களால் முருக னுடைய பக்தி எங்கும் பரவுகிறது. அவனுடைய திரு வருளேப் பெற்ற பெருமக்கள் பலர் ஆலுைம் அருண கிரி முனிவரைப்போல் உலகத்தார் விரும்பிப் படிக்கும் வண்ணம் தம் அநுபவத்தைச் சொன்னவர்கள் மிகச் சிலர். அன்றியும் அந்தப் பெருமானப்போலப் பெரிய அளவில் பல பல பாடல்களைப் பாடியவரும் குறைவு; யாரும் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/23&oldid=855788" இலிருந்து மீள்விக்கப்பட்டது