பக்கம்:ஞான மாலை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலை 7 அவ்வளவும் சந்தப் பாடல்கள். தமிழ் இலக்கியத்தில் சந்தப் பாடல்களைப் பாடிய பெருமக்களுள் அருண கிரிகாதப் பெருமானப் போலப் பாடியவர் யாரும் இல்லே. பழங்காலத்தில் சந்தம் வழக்கத்தில்இருந்தது. ஆனல் பாலில் போடும் குங்குமப் பூவைப் போல அருமையாகவே இருந்தது. கலிப்பா என்னும் பாவின் இடையே வண்ணகம் என்ற உறுப்பு வரும். அதை அராகம் என்றும் சொல்வார்கள். பாட்டின் இடை யிலே முடுகு வரும். அதுவே அராகம். அது ஒருவகைச் சந்தமாக இருந்தது. பின்னும் வண்ணம் என்றும், வகுப்பு என்றும் பெயர் பெற்ற சில பாடல் கள் வந்தன. பிள்ளைத்தமிழ் என்னும் பிரபந்தத்தில் வகுப்பை ஆளவேண்டுமென்று இலக்கணம் சொல் லுகிறது. சில விருத்தங்கள் சந்த விருத்தங்களாக அமைந்தன. அருணகிரிகாதப் பெருமானே பதிருை யிரம் திருப்புகழைப் பாடினர்; சின்னப் பாடல்களாக வும், பெரிய பாடல்களாகவும் பாடினர்; மிகவும் விரிவான சந்தங்களை அமைத்துத் தாளக் கட்டுப் பாட்டோடு அற்புதமாக அமையும்படி பாடினர். அத்தகைய சந்தங்கள் வேறு யாராலும் பாட முடியாது; வேறு எந்த மொழியிலும் இல்லை. மறைந்தவை அருணகிரிநாத சுவாமிகள் பாடியவை பதிருை யிரம் திருப்புகழ் என்று சொல்வார்கள். ஆல்ை இப் போதோ ஆயிரத்து முந்நூற்றுச் சொச்சம் பாட்டுக் களே எஞ்சியிருக்கின்றன. இறைவன் உலகத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/25&oldid=855792" இலிருந்து மீள்விக்கப்பட்டது