பக்கம்:ஞான மாலை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலை Í 3" பாடல்களைப் பக்தர்கள் யாவரும் பாராட்டும்படியாகச் செய்திருக்கிருன். அவ ன் கருணை இருந்தவாறு என்னே! அந்தக் கருணையை நான்மறக்க முடியுமா?" என்று இறைவனே எண்ணி உருகினர். அவனுடைய பெருங் கருணையை ஒரு பாட்டில் சொல்லியிருக்கிருர் "பக்தர்க ணப்ரிய கிர்த்தக டித்திடு பட்சிங் டத்திய குகபூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள பத்தர்கள் அற்புதம் என ஒதும் சித்ாக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி தடியேனும் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரகம் மறவேனே." 'பக்தர் கூட்டத்திற்கு விருப்பமுடைய பெருமானே, நடனம் ஆடுகின்ற மயில் வாகனத்தை கடத்துகின்ற முருகப் பெருமானே, கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என்ற நாலு திசையிலும் இருக்கும் பக்தர்கள் இது மிகவும் அற்புதமான பாடல் என்று பாராட்டிச் சொல்வதற்குரிய அலங்காரமான கவிதா சக்தியோடு: கட்டிய இன்னிசைத் திருப்புகழைச் சிறிதளவு அடியேனேயும் செப்பென்று கிருபை செய்து, உலகம் எங்கும் பரவச் செய்து, தரிசிக்கவும் செய்த உன்னு டைய பேரருளே கான் என்றைக்கும் மறக்க மாட் டேன்’ என்று மனம் கனிந்து பாடுகிருர். அந்தப் பாடலில் சித்திரம் இருந்தது; பல வகையான அலங் கார அமைப்புகளும். கவித்துவமும் இருந்தன; கவி ஆற்றல் கிரம்பியிருந்தது; இனிமையான ஓசை இருந்தது. இவ்வளவும் சொல்லி, சிறிது அடியேன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/31&oldid=855807" இலிருந்து மீள்விக்கப்பட்டது