பக்கம்:ஞான மாலை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலை 15 என்பது ஒளவையார் பாட்டு, சந்தப் பாடல்களுக்கோ வெண்பாவைக் காட்டிலும் கடுமையான அமைப்புகள் உண்டு. மெல்லினத்திற்கு மெல்லினம், வல்லினத் திற்கு வல்லினம், கெடிலுக்கு நெடில், குறிலுக்குக் குறில் என்று அமைக்கவேண்டும். தத்த,தங்த, தன்ன, தனன, தான, தைய முதலிய சங்த அமைப்புகளே அருணகிரி பார் பாடலில் மிக விரிவாகக் காணலாம். அத் தகைய பாடல்களைப் புலவர்கள் முயன்று சிரமப்பட்டுப் பாடலாம். ஆணுல் நூறு பாட்டுப் பாட லாமேயொழிய ஆயிரக்கணக்கில் பாடவொண்ணுது. அருணகிரியார் பாடின பதிருையிரம் பாட்டுகளும் இப்போது இருந்தால் அவற்றை வாசிக்கவும், பொருள் காணவுமே முழு மனித ஆயுள் வேண்டி யிருக்கும். அப்படி இருக்கப் பதிஞருயிரம் பாடல்களே அருணகிரியார் பாடுவது என்ருல், - தடையில்லாத கங்கை வெள்ளத்தைப்போல அவை அவரது திரு வாக்கில் வந்திருக்கவேண்டும். அதைச் சாமானிய மனித முயற்சி என்று சொல்ல முடியாது. எல்லாம் வல்ல ஆண்டவன் அவர் மூலமாக அவற்றை வெளி யிட்டான் என்றே கொள்ளவேண்டும். . அவருடைய ஆசை இவ்வாறு அற்புதமான சந்தப் பாடல்களே இறை வன் திருவருள் கொண்டு பாடிய அருணகிரி காத ருக்குத் திருப்தி உண்டாகவில்லை. அவர் . மனத்தில் - ஒரு குறை இருக்தது. வேறு வகையான பாடல், பாடவேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். . s - அந்த ஆசை ஒரு காலைக்கு ஒருகால் மிகுத்து வத்த - :: - • து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/33&oldid=855811" இலிருந்து மீள்விக்கப்பட்டது