பக்கம்:ஞான மாலை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலே 33 மான மணமுடைய மலரின் தன்மையை மூக்குடைய மனிதன் உணர்ந்துகொள்ள முடியாது. ரோஜாப் பூவின் மணத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம். தாமரைப் பூவின் மணத்தை அப்படித் தெரிந்து கொள்ள இயலாது. மனிதனுக்கு ஜலதோஷம் பிடித்து கொண்டால் மனத்தை அரியவொண்ணுது. மணத்தை கன்கு அறிந்துகொள்ளும் திறத்தில் மனிதனுடைய மூக்கு நரம்புகளுக்கு ஆ ற் ற ல் போதாது; அவை தடித்திருக்கின்றன என்று சொல்ல வேண்டும். அதுவும் புகையும், புழுதியும் படிந்துள்ள மூக்குடைய இக் காலத்தவர்களுக்கு நுட்பமான மணத்தை அறிகிற ஆற்றல் போய்விட்டது.இயற்கை யிலேயே மணத்தை அறிகின்ற தன்மை உடையவை வண்டுகளே. வண்டும் மணமும் வண்டுகளைக் கொண்டு மனத்தின் பெருமை யைத் தெரிந்துகொள்வது ஒரு மரபு. சங்ககால நூலாகிய குறுங்தொகையில், ஒரு தலைவன் தன் னுடைய நாயகியின் கூந்தல் மணத்தைப்பற்றிப் பேசு கின்ருன். அந்தக் கூந்தலில் இயற்கையாக மணம் அமைந்திருக்கிறது. அதை அவன் சொல்ல வரும் போது இதில் மனம் இருக்கிறது என்று சொல்ல வில்லை. மணத்தைத் தெரிந்து கொள்ளும் நிபுண ளுகிய வண்டைப் பார்த்து, “உயர்ந்த சாதி வண்டே, நீ எத்தனையோ மலர்களைப் பார்த்திருப்பாயே! அப்ப டிப் பார்த்திருக்கிற மலர்களுக்குள்ளே என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/41&oldid=855830" இலிருந்து மீள்விக்கப்பட்டது