பக்கம்:ஞான மாலை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

叠 34 ஞான மாலை காதலியின் கூந்தலில் உள்ள மனத்தைப் போன்ற மணம் உடைய மலர் எங்காயினும் இருப்பதை நீ கண்டாயா?” என்று கேட்டுப் பாடுகிருன். 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ' என்று தொடங்குகிருன். இந்தப் பாட்டை ஆலவாய் இறைவன் பாடியதாகச் சொல்வார்கள். திருமுரு காற்றுப்படை பிறப்பதற்குக் காரணமான பாட்டு இது என்று திருவிளையாடல் புராணத்தில் ஒரு வரலாறு வருகிறது. இந்தப் பாட்டுப் பலருடைய உள்ளத் தைக் கவர்ந்த பாட்டு என்பதை அந்த வரலாறு காட்டும். தும்பி என்பது உயர்ந்த சாதி வண்டு; நுட்பமான மணத்தை அறியும் ஆற்றல் உடையது. மனிதன் உணர முடியாத மனத்தை வண்டு உணரும் என்பதற்கு இந்தப் பாட்டு ஒரு சான்று. இப்படியே சீவக சிங்தாமணியில் ஒரு கதை வரு கிறது. பெண்கள் த்ெரிந்து கொள்ளும் கலைகளில் சுண்ணம் கட்டுதல் ஒரு கலை. பலவகை வாசனைப் பொருள்களைக் கலந்து சுண்ணம் செய்வார்கள். பெண்கள் அதைத் திருமேனியில் அணிந்துகொள் வார்கள். - ஒருத்தி சிறந்த சுண்ணத்தை அமைத்தாள். அவளது தோழியும் சுண்ணத்தை அமைத்தாள். இரண்டு பேர்களுடைய சுண்ணங்களில் எது சிறங் தது என்ற ஆராய்ச்சி பிறந்தது. ஒவ்வொருத்தியும் தன்னுடைய சுண்ணமே சிறந்தது, சிறந்த மணம் உடையது என்று வாதித்தாள். அப்போது எல் லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/42&oldid=855832" இலிருந்து மீள்விக்கப்பட்டது