பக்கம்:ஞான மாலை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மாலை 3? மென்று அருணகிரியார் விரும்புகிருர். அதாவது ஐம்பத்தொரு பாடல்கள் அடங்கிய ஒரு மாலே யைக் கட்டவேண்டும் என்பது அதன் பொருள். - பஞ்சரத்தினம், நவமணி மாலை என்று சிலவகைப் பிரபந்தங்கள் தமிழில் உண்டு. ஐந்து விதமான இரத் தினங்களைப் போல ஐந்து விதமான பாடல்கள் அமைந்த மாலேக்குப் பஞ்சரத்தினம் என்று பெயர். அதுபோலவே ஒன்பது பாடல்களை உடைய பிரபங் தத்துக்கு நவமணிமாலை என்று பெயர். இரண்டு வேறுவகையானபாடல்களையுடைய நூலுக்குஇரட்டை மணி மாலை என்றும், மூன்று வேறுவகைப் பாடல்களை யுடைய மாலேக்கு மும்மணி மாலை என்றும், கான்கு. வேறு வகையான பாடல்களைப்பெற்றதற்கு நான்மணி மாலே என்றும் பெயர்கள் வழங்குகின்றன. அவ்வாறே ஐம்பத்தொரு பாடல்கள் அமைந்த மாலைக்கு மாத்ருகா புஷ்பமாலை என்று பெயர் கொடுத்திருக் கிருர். அட்சரதீபம் என்ற பெயர் ஐம்பத்தொன்று என்ற எண்ணிக்கையை கினைந்து வந்ததுபோல, எழுத்துக் கணக்காகிய ஐம்பத்தொன்று என்ற எண்ணிக்கையில் பாடல்கள் அமைந்ததை மாத்ருகா புஷ்பமாலே என்ருர். எழுத்துமாலை, அட்சர மாலை என்றும் சொல்லலாம். முருகா, நான் ஐம்பத்தொரு பாடல்கள் அமைந்த மாலையை இயற்றி உன்னுடைய திருவடிக் குச் சூட்டவேண்டும். என் உள்ளம் முழுமையும் அதில்அன்புடன் ஈடுபடவேண்டும். மிகவும் அலங்கார மான பாமாலையாக அது அமையவேண்டும். என் னுடைய காக்கினுலே அன்பு நூலிலே அருமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/45&oldid=855838" இலிருந்து மீள்விக்கப்பட்டது