பக்கம்:ஞான மாலை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.28 ஞான மாலை யாகக் கட்டிய அதில் ஞான மணம் வீச வேண்டும். அதில் ஞான மணம் இருப்பதை மாசு இல்லாத உள் எாம் படைத்த பெருமக்கள் பாராட்டிச் சொல்லவேண் டும்; அவர்கள் அதைப் பாடவேண்டும்” என்று எம் பெருமானப் பார்த்து அருணகிரியார் விண்ணப்பம் செய்துகொண்டார். "ஆசைகூர் பக்த னேன்மனே பத்ம மானபூ வைத்து நடுவேஅன் பான நூலிட்டு காவிலே சித்ர மாகவே கட்டி ஒருஞான வாசம் வீ சிப்ர காசியா நிற்ப மாசிலோர் புத்தி அளிபாட மாத்ருகா புஷ்ப மாலை கோலப்ர வாளபா தத்தில் அணிவேனே." முருக வள்ளல் முருகப்பெருமான் தன்னை வேண்டியவர்க்கு வேண்டியவற்றை வேண்டியபோது தருகிற வள்ளல். வேண்டிய போதடியர் வேண்டி போகமது வேண்ட வெருதுதவு-பெருமாளே!' என்று அருணகிரியார் திருப்புகழில் பாடுகிருர். செல் வன் ஒருவனே இரவலன் அடைந்து ஏதேனும் யாசித் தால் அவன் வள்ளலாக இருந்தால் கேட்ட பொரு ளேத் தருவான். மீட்டும் அவன் வந்து கேட்டால் முன்பு தந்ததுபோல மனம் குழைந்து தருவது இல்லை. இப்போது தானே வாங்கிய்ை?” என்று சொல்வான். அடுத்தடுத்துக் கேட்கிறவனைக் கண் உால் செல்வனுக்குக் கோபம் வரும். ஒரு பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/46&oldid=855840" இலிருந்து மீள்விக்கப்பட்டது