பக்கம்:ஞான மாலை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஞான மாலை யால் முருகப்பெருமான் அருணகிரி காதருக்குப் பெரிய அநுபூதியைத் தந்து ஜீவன் முக்தராக்கி, அப்பால் கந்தர் அநுபூதியைப் பாடச் செய்தான். அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியைப் பாடவேண்டு மென்று கேட்டாலும் அதற்கு முன்னலே அருள் அநுபூதியைத் தரவேண்டும் என்ற விண்ணப்பமும் அந்தப் பாடலில் குறிப்பாகத் தொனிக்கிறது. அவர் பாடின திருப்புகழ், அலங்காரம் முதலியவை ஒருவகை. அநுபூதி ஒரு தனி வகை. பொருள் கிரம்பி, உருவம் சுருங்கி, கந்தர் அநுபூதி விளங்குகிறது. ஆண்டவன் திருவருளால் பெற்ற அநுபவத்தை நுட்பமாகச் சொல்லியிருக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/48&oldid=855844" இலிருந்து மீள்விக்கப்பட்டது