பக்கம்:ஞான மாலை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கிளி மொழி எடுத்து உடுத்துக் கொண்டார்களாம். அதனேக் கவனித்த வியாசர், "எனக்கு முன்னலே என்னிலும் இளைய ஒருவன் போகும்போது நீங்கள் ஆடை கட்டிக் கொள்ளவில்லை; என்னைக் கண்டு ஏன் கட்டிக்கொள் கிறீர்கள்?’ என்று கேட்டாராம். உங்களுக்குத்தான் காங்கள் ஆடை கட்டிக்கொள்கிருேம் என்று பார்க் கிற பார்வை இருக்கிறது. முன்னலே போனவருக்கு அத்தகைய உணர்ச்சி எதுவும் இல்லை" என்று சொன்னர்களாம். அப்படி ஞானமயமாக கின்றவர் சுகப்பிரம்மம். அவர் கண்ணபிரானுடைய திருவிளே யாடல்களைப் பாடியிருக்கிருர், பாகவதம் கிளி மொழி. அதுபோலவே அருணகிரிநாதப் பெருமான் முருகனுடைய திருவருளினுல் ஜீவன் முக்த கிலே பெற்று அநுபூதியில் தோய்ந்து கிளியாக கின்று கந்தர் அநுபூதி பாடினர். ஆகவே, கந்தர் அநுபூதிப் பாடலும் ஒருவகைக் கிளி மொழிதான். பக்தர்களுக்கு உபாசனு தெய்வங்களாகப் பல மூர்த்திகள் உண்டு. ஆயினும் வைணவத்தில் கண்ணனையும், சைவத்தில் கந்தனையும் வழிபடுகிற வர்கள் சிறந்த பக்தர்களாக இருக்கிருர்கள். யந்திர மந்திர தந்திரங்களாகிய வரையறை இல்லாமல் நெஞ்சுருகி வேண்டியபடி பஜனை செய்து போற்றுகிற மூர்த்திகள் கந்தனும், கண்ணனும். பாகவத சம்பிர தாயப்படி பஜனை செய்கிறவர்கள் கண்ணனை முக்கிய மாக வைத்துக்கொள்வார்கள். அப்படியே தமிழ் காட்டில் பக்தி செய்கின்ற மக்கள் பெரும்பாலும் முருகனுடைய அடியார்களாக இருப்பதைக் காண லாம். கந்தனும், கண்ணனும் பலவகையில் ஒப்புமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/50&oldid=855849" இலிருந்து மீள்விக்கப்பட்டது