பக்கம்:ஞான மாலை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஞான மாலை ஆளுல் யோகம் முதலியவற்ருல் தம்முடைய உடம் பைத் துாயது ஆக்கிக்கொண்ட சித்தர்கள் இதி லிருந்து பெளதிகப் பகுதிகளை எல்லாம் மூலத்தோடு ஒன்றுபடும்படி செய்து இறைவன் திருவடியோடு சேர்ந்துவிடுகிருர்கள் என்று சித்த நூல் வல்லுநர் சொல்வார்கள். அவ்வண்ணமே அருணகிரி காதப் பெருமான் இந்தப் புலால் உடம்பை கீத்துச் சுக சொரூபமாகிய கிளியின் திருவுருவத்தை ஆடைக் தார் என்று கொள்ளலாம். மற்றவர்கள் இறந்துபடு வதுபோல அவரும் இறந்து படாமல், இருந்தது இருந்தபடியே உடம்பு மறைய, இறைவன் திருக்கரத் தில் பச்சைப் பசுங் கிளியாக எழுந்தருளினர். சித்தர் முறையில் இதற்கு மேலே சொன்னபடி பொருள் கொள்ளலாம். இதனை கம்பாதவர்களுக்கு ஞான நூல் முறையில் மற்ருெரு வகையில் பொருள் கொள்ளலாம். - பதி கரணம் மனிதன் இந்த உடம்பு இருக்கும் போதே இறை வன்திருவருளேப் பெற்று முத்திஇன்பத்தைப்பெறலாம் என்பது நம்முடைய சாத்திரத்தின் துணிபு. உடம்பை விட்டு இறைவைேடு ஒன்றுபடும் முத்தியை விதேக முத்தி என்றும், உடம்பு இருக்கிறபோதே பெறும் முத்தியை ஜீவன் முத்தி என்றும் சொல்வார்கள். உலக இயலில் ஈடுபட்டு வாழ்கிற மனிதனைப் போலவே ஞானம் பெற்றவர்கள் இருந்தாலும், அவர் களுடைய கருவி கரணங்கள் ஞான அக்கினியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/52&oldid=855851" இலிருந்து மீள்விக்கப்பட்டது