பக்கம்:ஞான மாலை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ஞான மாலே 'எனதுரை தனதுரையாக' என்று அப் பெருமான் பாடியிருக்கிருர், "இந்தப் பாடல்களை நான் பாடவில்லை. எம்பெருமானே என்னைக் கருவியாகக் கொண்டு பாடுகிருன்” என்ற கருத்தோடு அப்படிப் பாடினர். அவ்வாறே அருண கிரிகாதப் பெருமானே முருகப்பெருமான் அதிஷ்டித்து நின்று பாட அவர் பாடினர். இராமலிங்க சுவாமிகள் தம்முடைய பசு கரணங்கள் மாறிப் பதி கரணங்கள் வரவேண்டும் என்று ஆண்டவனை வேண்டியிருக்கிருர்; "படமுடியா திணித்துயரம் படமுடியா தரசே பட்டதல்லாம் போதுமிந்தப் பயந்தீர்த்திப் பொழுதென் உடல்உயிரா தியவெல்லாம் கீஎடுத்துக் கொண்டுன் உடலுயிரா தியவெல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய்!" இந்தப் பாடலில், "என் உடல் பொருள் ஆவி ஆகிய இவை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உன் உடல் பொருள் ஆவி ஆகியவற்றை எனக்கு அளிப் பாயாக" என்று சொல்கிருர். இது பெளதிக சரீரத்தின் பண்பு மாறிச் சிவஞான சரீரம் வரவேண் டும் என்ற கருத்தைச் சொல்வது. அருணகிரியார் அத்தகைய கிலேயைப் பெற்ருர், வாயில் எதற்கு? “முருகப் பெருமான் கந்தர் அநுபூதியை அருண கிரியார் வாயிலாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அவனே நேரில் சொல்லிவிடலாமே” என்று ஒருகருத்து எழுவதற்கு நியாயம் உண்டு. வேதங்களே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/54&oldid=855855" இலிருந்து மீள்விக்கப்பட்டது