பக்கம்:ஞான மாலை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 37 முனிவர்கள் இயற்றினர்கள் என்பது புதிய ஆராய்ச் சிக்காரர்கள் கொள்கை. ஆளுல் பழைய மரபுப்படி அப்படிச் சொல்வது இல்லை. வேதம் இறைவனுடைய' திருவாக்கு என்பார்கள். இறைவன் நேரே அவற்றை வந்து சொல்லவில்லை, பரமாகாசத்தில் அலேயலே யாக மிதக்து கொண்டிருந்த வேதமாகிய ஒலிகளே ஏற்றுக் கொள்வதற்குரிய பக்குவிகளாகிய முனிவர் கள் அவற்றை அறிந்து சொன்னர்கள். அதல்ை அவர்களேமந்திரங்களைக்கண்டவர்கள் என்றபொருளே யுடைய மந்திரத் திரஷ்டாக்கள்’ என்று சொல்வார். கள். வேத மந்திரங்களே வெளியிடுவதற்கு அவர்கள் கருவியாக இருந்தார்களே யன்றி அவர்களே அவற் றைச் சொன்னர்கள் என்று சொல்வது முறை அன்று, அவ்வாறே முருகப்பெருமானுடைய திருவாக்கு உலகத்திற்குப் பயன்படும்பொருட்டு அருணகிரியார் வாங்கித் தம்முடைய வாக்கிளுலே சொன்னர் என்று கொள்வது பொருத்தம். முருகனுடைய வாக்கைக் கேட்பதற்குரிய ஆற்றல் நமக்கு இல்லை. பெரும் கடட்டத்தில் ஒரு மனிதன் பேசினல் لہ6|نتےgg[[66( لانا ــا குரல் எல்லாருக்கும் காதில் விழாது; அருகில் இருப் பவர்களுக்கு மாத்திரம் விழும். முருகப்பெருமானுக்கு அருகில் உள்ளவர்களே அவன் மொழியும் உப தேசத்தைக் கேட்க முடியும். அப்படியின்றி. எல் லோரும் கேட்கவேண்டுமானுல் அதற்குரிய தந்தி ரம் ஒன்று செய்யவேண்டும். இப்போது பேசுபவர் களுடைய பேச்சைக் கூட்டத்திலுள்ள எல்லோரும். கேட்கவேண்டுமானல் ஒலிபெருக்கியை வைக்கிருேம். ஒலி பெருக்கி தானகப்பேசாது. ஒலி பெருக்கி இல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/55&oldid=855857" இலிருந்து மீள்விக்கப்பட்டது