பக்கம்:ஞான மாலை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&8 ஞான மாலே மல் ஒருவன் பேசில்ை அது எல்லோருடைய காதி அலும் விழாது. ஒருவன் பேச, அதை ஒலிபெருக்கி வாங்கிக் கொண்டு நெடுந்து ரத்திற்குக் கொண்டு சொல்வது போல, இறைவன் பேச அதனே உரிய பக்குவம் உடைய பெரியவர்கள் வாங்கிக்கொண்டு உலகத்தாருக்கு வெளியிடுகிருர்கள். முருகனுடைய மொழி நமக்கு விளங்காது. அதனை நமக்கு விளங்கும் மொழியில் அருணகிரியார் சொன்னர். முருகன் சொன்னதைச் சொன்னமையில்ை இது கிளியின் வாக்கு என்று பெருமக்கள் அலங்கார மாகச் சொன்னர்கள் என்று கொள்ளலாம். அநுபவ வாக்கு அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியைப் பாடும். போது பக்குவத்தில் உயர்ந்து கின்ருர் என்பதை நம் மனத்தில் கொண்டால் போதும். கந்தர் அநுபூதி யைப் பாராட்டின பெருமக்கள் பலர். அவரே, ஆசை கூர் பக்தனேன்” என்ற திருப்புகழில், 'மாசிலோர் புத்தியளி பாட' என்று வேண்டிக்கொண் டிருக்கிருர். அது பலித்தது. தாயுமான சுவாமிகள் வேதாந்த சித்தாந்த சமரச கிலே பெற்ற சிறந்த அநுபூதிமான்; கிஷ்டாபரர். அவர் தம் பாடலில் பல நூல்களைப் பாராட்டியிருக் கிருர் அருணகிரிநாதரிடம் அவருக்கு எல்லை யற்ற மதிப்பு உண்டு. இறைவனுடைய அருள் இன்ப அநுபவம் எல்லோராலும் சொல்லொணுதது. 'கண்ட வர் விண்டிலர்” என்று ஒரு பழமொழி உண்டு. ஆன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/56&oldid=855859" இலிருந்து மீள்விக்கப்பட்டது