பக்கம்:ஞான மாலை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 45. வோடு சம்பந்தம் உடையது ஆனந்தம் ஒன்றுதான். சச்சிதானந்தப் பொருளாகிய இறைவைேடு ஒன்று. சேருகிற நிலையில் அந்த ஆனந்தம் உண்டாகிறது. அது நிழல் இல்லாத ஒளி போன்றது. அத்தகைய அநுபூதி எல்லா ஆன்மாக்களுக்கும் கிடைப்பது இல்லை. அந்த அநுபூதி நமக்குக் கிடைக்காமல் தடுப்பது பாசம் அல்லது மலம். அந்த மலத்தில் மிகவும் முக்கியமானது ஆணவம். ஆன்மா ஆணவத். தோடு இருக்கும் மட்டும் சிறந்த அநுபவம் வராது. ஆணவத்தை விட்டு இறைவளுேடு ஒன்றுபட்டால் அந்த ஆனந்தம் கிடைக்கும். "ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தாணுவிளுேடத்துவிதம் சாருகா ளெந்நாளோ?" என்பர் தாயுமானவர். - உயிருக்கு ஆணவம் என்ற அழுக்கு இருக்கிறது. அந்த அழுக்குப் போனுல்தான் இறைவனுடைய ஆனந்தம் நமக்குக் கிடைக்கும். அழுக்கு உள்ள மட்டும் இறைவன் எத்தனை நெருங்கி இருந்தாலும் அந்த ஆனந்தம் ஆன்மாவில் உறைக்காது. பாத் திரங்களுக்கு ஈயம் பூசவேண்டும். ஈயம் பூசுகிறவன் வருகிருன். அவன் முதலில் பாத்திரத்தைச் சுத்தப் படுத்துகிருன். அதன் அழுக்கை மாற்றிப் பின்பு கனலில் இட்டு கன்ருகக் காய்ந்தபின் நவாசாரப் பொடியைத் துாவி ஈயத்தைப் பூசுகின்ருன். முதல் காரியமாகப் பாத்திரத்தின் அழுக்குப் போகும்படியா கச் செய்கிருன். அப்புறமே நவாசாரப் பொடியைத் தூவி ஈயம் பூசுகிருன். அப்படியே, இறைவன் உயி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/63&oldid=855876" இலிருந்து மீள்விக்கப்பட்டது