பக்கம்:ஞான மாலை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 47 'பேசா அநுபூதி பிறந்ததுவே" என்று அருணகிரிநாதப் பெருமானே ஒரு பாடலில் சொல்லியிருக்கிருர். அநுபூதி என்பது நேரே அநுப வத்தைக் காட்டுகிற பாடல் அல்ல; அநுபவத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் வழியைச் சொல்வது. அந்த வழி நம்மிடத்திலிருந்து தொடங்கி இறைவ னிடத்தில் முடியும். முருகப்பெருமானுடைய இன்ப அநுபவம் பெற்ற அருணகிரிநாதர் அவனிடத்தில் நின்றுவிடவில்லை. மீட்டும் கம்மளவும் வந்து கின்று, வாருங்கள், வாருங்கள்” என்று நம்மையும் அங்கே அழைத்துச் செல்கிருர். நம்முடைய கிலேயை நமக் குக் காட்டி, நடுவழியில் உள்ளவற்றைக் காட்டி, இறைவனேக் காட்டி, இறைவனோடு ஒன்றுபடும்போது உண்டாகும் இன்பத்தை ஓரளவு காட்டி அநுபூதிப் பாமாலையை நிறைவேற்றுகிரு.ர். சாத்திரத்தைச் சொல்பவராக இருந்தால் படிப் :படியாக ஒன்று, இரண்டு, மூன்று என்று திட்டமாகச் சொல்லியிருப்பார். அநுபூதியைப் பெற்ற இன்பக் களிப்பில் பாடுவதாகையால் அப்போதைக்கப்போது எந்த கிலே உள்ளத்தில் படுகிறதோ அதை அதைச் சொன்னர். முதல் பாட்டில் மாதர் மயலேப் பற்றிச் சொல்லியிருப்பார். அடுத்த பாட்டில் இறைவன் அருள் அநுபவத்தைச் சொல்லியிருப்பார். இது என்ன, ஒரு திட்டம் இல்லாமல் பாடுகிருரே?” என்ருல் அவர் ஆசிரியராக கின்று படிப்படியாக உபதேசம் செய்ய வரவில்லை. தம்முடைய அநுபவத்தை விளம் பரப்படுத்தவும் வரவில்லை. உலகத்து ம க் க ள் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற கருணையினுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/65&oldid=855882" இலிருந்து மீள்விக்கப்பட்டது