பக்கம்:ஞான மாலை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 49 மாலையில் பச்சிலை எம்பெருமானுக்குப் பெரிய மாலை போட அவர் எண்ணினுர். அந்த மாலையில் தம்முடைய அநுபவத் தைச் சொன்னதோடு கம்முடைய அநுபவத்தையும் சொன்னர். காம் என்ன என்ன துன்பங்களே அது பவிக்கின்ருேமோ அவற்றைத் தம்முடையனவாக ஏறட்டுக்கொண்டு பாடினர். கமக்கு இறைவனிடத்தில் நேரே சொல்லிக்கொள்வதற்குரிய ஆற்றல் இல் லாமையினுல், நமக்காக அவர் வக்காலத்து இல்லா மலே ஆஜர் ஆகும் வக்கீலாக இருக்கிருர். அவர் படைத்த மாலையில் இத்தகைய பாடல்கள் கடுநடு விலே இருக்கின்றன. பல வண்ண மலர்களையுடைய மாலேயின் நடுவில் பச்சை இலையைக் கட்டுவார்கள். மணமற்ற வெறும் பச்சை இலையை வைத்தும் கட்டு வது உண்டு. அந்த இலையைத் தனியே விற்க முடி யாது. மாலேயோடு கட்டிவிட்டால் அதுவும் சேர்ந்து விலை போகிறது. மாலேயில் இருக்கும்போது பெரு மையேயொழியத் தனியே அந்த இலைகளே யாரும் வைத்துக்கொள்ளமாட்டார்கள். அவற்றை மாலை யாக அணிந்துகொள்ள முடியாது. அப்படியே நம் முடைய துன்பங்களையும் கம்முடைய துயர அது பவங்களையும் நாம் சொல்வதாக இருந்தால் அவை மாலையாகா. அருணகிரிநாத சுவாமிகள் தம் அது பவத்தோடு சேர்த்து கம் அநுபவத்தையும் மாலை யாக்கினர். அப்படியானுல் உலகினர் துன்பப்படுகிருர் களே என்று இறைவனிடத்தில் விண்ணப்பித்துக் ஞா. 4 ... -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/67&oldid=855886" இலிருந்து மீள்விக்கப்பட்டது