பக்கம்:ஞான மாலை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 - ஞான மாலை கொண்டிருக்கலாமே! 'கான் இவ்வாறு செய்கிறேன்” என்று சொல்லலாமா? என்று கேட்கலாம். சில ஆராய்ச்சிக்காரர்கள் அருணகிரியார் சொல்லி யிருக்கின்ற குற்றங்கள் அவர் வாழ்க்கையில் அவர் செய்தன என்று எழுதியிருக்கிருர்கள். அப்படியால்ை இப்போது கிடைக்கின்ற 1800 பாடல்களில் என்ன என்ன பாவங்களைத் தாம் செய்ததாகச் சொல்லி யிருக்கிருரோ அவற்றை யெல்லாம் தொகுத்துப் பார்த்தால் ஒரு பெரிய வரிசை கிடைக்கும். அந்தப் பாடல்களில் உள்ள குற்றங்கள் அனைத்தையும் ஒரு மனிதன் ஒரு வாழ்நாளில் செய்ய முடியாது. இப் போது கிடைக்கும் பாடல்களிலேயே இவ்வளவு நீண்ட பட்டியல் இருக்குமானுல் அவர் பாடிய பதி குருயிரம் திருப்புகழ்ப் பாடல்களும் கிடைத்திருந்தால் எத்தகைய பெரிய பட்டியலாக இருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்கவேண்டும். பெரியவர்கள் உலகத்திலுள்ள மக்கள் செய் அகின்ற குற்றங்களே எல்லாம் தம்முடையனவாக ஏறட்டுக்கொண்டு இறைவனிடத்தில் விண்ணப்பித் துக்கொள்வது இயற்கை நிறையப் பணம் படைத் தவன் தனக்கு மேற்பட்ட பணக்காரனப் பார்த்து, “எனக்கு அப்படிக் கிடைக்கவில்லையே!” என்று ஆசைப்படுவதுபோல, "நான் பாவி, நான் இழிந்த வன். இன்னும் அந்தப் பெரியவரைப்போல అత్తి! త్ வில்லையே!” என்று பெரியவர்கள் புலம்புகிருர்கள். இதை கைச்சியாதுசந்தானம் என்று வடமொழியில் கடறுவார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/68&oldid=855888" இலிருந்து மீள்விக்கப்பட்டது