பக்கம்:ஞான மாலை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளி மொழி. 51 மொழி பெயர்ப்பாளர் நிலை நம்முடைய துன்பங்களைத் தம்முடையனவாகச் சொல்லாமல், உலகினர் இப்படித் துன்புறுகிருர்களே என்று அருணகிரியார் சொல்லியிருக்கலாம். அப் படிச்சொல்வது வக்கீல் வாதம்போன்றது. வக்கீல்கள், என்னுடைய கட்சிக்காரன் இப்படிச் செய்தான்; இன்னவாறு சொல்லுகிருன்” என்று வழக்காடும் போது பேசுகின்ருர்கள். அப்படியே அவரும் சொல்லி யிருக்கலாம். ஆல்ை அவருடைய கருணை அதற்கும் மேற்பட்டுப் போயிற்று. அவர் நம்முடைய துவிபாஷி யாக, மொழிபெயர்ப்பாளராக, அதாவது காம் சொல்ல வேண்டியதை இறைவனிடத்தில் தாம் சொல்லிக் காட்டுகின்றவராக அமைகிருர். குருஷேவ் , ரஷ்யாவிலிருந்து வந்து இங்கே நம்முடைய ஜனதிபதியுடன் பேசினர். நம்முடைய ஜனதிபதிக்கு ரஷ்ய மொழி தெரியாது; குருஷே வுக்கு இந்தி தெரியாது. இரண்டு பேருக்கும் இடையே ஒரு மொழிபெயர்ப்பாளன் இருந்து அவர் பேசியதை இந்தியில் நம் தலைவருக்குச் சொல்ல, நம் தலைவர் பேசியதை ரஷ்ய மொழியில் ரஷ்யத் தலைவருக்குச் சொன்னன். அந்த மொழி பெயர்ப்பாளனுக்கு இரண்டு பேருடைய மொழிகளும் தெரியும். அப்படி மொழி பெயர்க்கும்போது, கான் இங்கே பத்து நாள் தங்குவதாக இருக்கிறேன்” என்று குருவேடிவ் சொன்னல், "குருஷேவ் இங்கே பத்து நாள் தங்குவ தாக இருக்கிருர்” என்று அவன் மொழி பெயர்க்க மாட் டா ன். அவ ன் இந்தியில், *币T6ör

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/69&oldid=855890" இலிருந்து மீள்விக்கப்பட்டது