பக்கம்:ஞான மாலை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஞான மாலே இருப்பதாக அவ்லவா அவர் பாடுகிருர்? பெரியவர் கள் உலகத்திலுள்ள மற்ற மக்களுடைய துன் பத்தையும், குற்றங்களையும் தம்முடையனவாக மேற் கொண்டு சொல்வார்கள் என்பதற்கு இதைக் காட்டி அலும் சிறந்த உதாரணம், மறுக்க முடியாத உதார னம், வேறு எங்கும் பார்க்க முடியாது. அருணகிரி நாதர் கருணை இந்த வகையில் அருணகிரிநாத சுவாமிகள் நமக்கும் முருகப்பெருமானுக்கும் இணைப்புச் சங்கிலி யாக கின்று அவனோடு ஒட்டித் தாம் பெற்ற அது பவத்தை நமக்குச் சொல்லி, நம்முடைய அநுபவங் களேயெல்லாம் இறைவனுக்கு எடுத்துக் கூறி முறை யிடுகிருர். இந்தப் பெரும் கருணையினல் அவருடைய கந்தர் அநுபூதி நமக்குச் சிறந்த நூலாகப் பயன்படு கிறது. - “தம்முடைய அநுபவத்தைச் சொன்னுல் போதாதா? நம்முடைய துன்பங்களை ஏன் சொல்ல வேண்டும்?' என்று அடுத்தபடி கேள்வி எழும். அருணகிரியார் கந்தர் அநுபூதியில் சொன்னது தம்முடைய அநுபவத்தையே அன்று. அநுபவம் சொல்ல முடியாதது. அவர் அநுபவிக்கின்றபோது இன்னவாறு இருந்தது என்று சொல்லவும் முடி யாது. அநுபவித்து, அதன்பின்பு உலக நிலைக்கு வந்தபோது மற்றவர்களும் உய்யவேண்டுமென்று கருதி இந்த நூலைப்பாடினர். பாடுவதற்குப் பயன் கெஞ்சம் உருகுதல் என்பதை இனிப் பார்க்கப் போகி

  • . ...
- .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/74&oldid=855902" இலிருந்து மீள்விக்கப்பட்டது