பக்கம்:ஞான மாலை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளி மொழி 5? ருேம். இறைவன் புகழை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்கோ, தம்முடைய அநுபவத்தை யாவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்கோ பாடியது அன்று இந்த நூல். இதைப் பாடுபவர்கள் மனம் உருகி, தம்முடைய குற்றங்களை எல்லாம் எண்ணி இரங்கி, அருணகிரியார் பெற்ற அநுபவத்தைக் கேட்டு, இத்தகைய அநுபவம் நமக்குக் கிடைக் காதா என்று ஏங்கவேண்டும். அதற்கு இந்த ஐம்பத் தொரு பாடல்களும் பயன்படும். இறைவனுடைய திருவடிக்கு அருணகிரியார் சூட்டிய மாலையானுலும் அந்த மாலேயின் மணம் கம்மையும் அங்கே இழுப்பது. இந்த அருமையான செயலைச் செய்தமையில்ை அருணகிரிநாதப் பெருமான் கருணையில் சிறந்தவ ராக விளங்குகிருர். 'கருணைக்கு அருணகிரி' என்று ஒரு பழம் பாடலில் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/75&oldid=855904" இலிருந்து மீள்விக்கப்பட்டது