பக்கம்:ஞான மாலை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் கந்தர் அநுபூதியைத் தொடங்கும் அருணகிரி காதப் பெருமான் முதலில் விநாயகர் வணக்கத்தைச் சொல்கிருர். அந்த வணக்கம் பொதுவாக இல்லா மல், நூல் இயற்றும் ஆசிரியர் அந் நூல் இனிது நிறைவேற வேண்டும் என்று பாடும் காப்புச் செய்யு. ளாக அமைந்திருக்கிறது. முருகப்பெருமானப்பற்றி இயற்றப்போகிற இந்த நூல் நன்ருக முடிவதற்காக விநாயகப்பெருமான் திருவடியை வணங்குகிறேன்' என்ற கருத்தோடு அமைந்தது அந்தப் பாட்டு. що т ц அருணகிரி நாத சுவாமிகள் முருகப்பெருமான விளித்துப் பாடுவது வழக்கம். ஆனலும் மரபை விடா மல் விநாயகப்பெருமானையும் விளித்துச் சில பாடல் களைத் திருப்புகழில் பாடியிருக்கிருர். அந்த வகையில் கந்தர் அநுபூதியின் ஆரம்பப் பாட்டு விநாயக வணக்கமாக அமைந்திருக்கிறது. அந்தப் பாட்டு வருமாறு. : . - கெஞ்சக் கனகல் லும்நெகிழ்க் துருகத் தஞ்சத்து அருள்சண் முகனுக்கு இயல்சேர் செஞ்சொல் புனைமா லைசிறந் திடவே பஞ்சக் கரஆ னே பதம் பணிவாம். இந்தப் பாட்டினுடைய பொதுவான பொருள், ! கெஞ்சமாகிய கனத்த கல் நெகிழ்ந்து உருகும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/76&oldid=855906" இலிருந்து மீள்விக்கப்பட்டது