பக்கம்:ஞான மாலை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 6 to இந்தக் காலத்தில் ஏதேனும் ஒரு வேலையைச் செய்தால் அதனுல் வருகிற பயன் என்னவென்று. மக்கள் கேட்கிருர்கள். தொழிலாளர்கள் தமக்குரிய கூலியை முன்னுல் வாங்கிக் கொள்கிருர்கள். இந்த நோக்கம் எப்போதுமே மனித உள்ளத்தில் அமைந்து கிடக்கிறது. ஏதேனும் ஒரு பொருளில் காட்டம் உண்டாகவேண்டுமென்ருல், அதனுல் உனக்கு இன்ன நலம் உண்டாகும் என்பதை முன்னுலேயே கூறினுல் அவர்கள் எளிதிலே பின்பற்றுவார்கள். மனிதனுடைய மன இயல்பை கன்ருக உணர்ந்த அருணகிரிநாதர் நூலைத் தொடங்கும்போதே, இத. ஞல் இன்ன லாபம் வரும் என்பதை எடுத்துச் சொல் கிருர். நெஞ்சமாகிய கன கல் நெகிழ்ந்து உருகுத லாகிய பெரும் பயன் கந்தர் அநுபூதிப் பாராயணத் தில்ை வரும் என்று கூறுகிருர். பிறவிக் கடல் இந்த உலகத்தில் பிறந்த மக்கள் யாவரும் இரு வினைகளின் விளைவான இன்பதுன்பங்களை அநுபவிக் கிருர்கள்.வாழ்க்கை முழுவதும் இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் கிரம்பியிருந்தாலும் பெரும்பாலும் துன் பமே உள்ளத்தில் சுவடுவிடுகிறது. அதல்ை இந்த வாழ்க்கையே துன்பம் என்ற உணர்வு மக்களுக்கு உண்டாகிறது. இப்படி வருகிற பிறவிகள் ஒன்று அல்ல;இரண்டு அல்ல; தொடர்ந்து வருகின்றன. புழு முதல் மனிதன் வரைக்கும் வருகிற பிறவிகள் எல் லாமே துன்பத்தைத் தருகிற பிறவிகளாக இருக்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/79&oldid=855912" இலிருந்து மீள்விக்கப்பட்டது