பக்கம்:ஞான மாலை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.62 - ஞான மாலை றன. தேவர்கள் பிறவி இன்பத்தைத் தருவதாக இருந்தாலும், மீட்டும் வேறு பிறவி எடுப்பதற்குக் காரணமாகவே முடியும். ஆகவே பிறவி என்பது துன்பத்திற்கு இடமாக உள்ளதுதான். இந்தப் பிறவியாகிய வரிசை என்றும் குறையா மல் நீண்டு வருவதால் பிறவியைக் கடல் என்று சொல்வார்கள். திருவள்ளுவரும், 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்' என்று பிறவியைக் கடலாக உருவகம் செய்தார். கடலுக்குக்கரை இல்லையென்று சொல்வது ஒரு மரபு. கரைகாணுமல் மேலும் மேலும் தொடர்ந்து வருவ தளுல் பிறவி கடல் ஆயிற்று. இன்ப துன்பங்களாகிய அலைகளைக் கொண்டு, ஆழமும் கரையும் காணுது விரிக் து விரிந்து போவது பிறவியாகிய கடல். இந்தக் கடலில் விழுந்த ஆருயிர்கள் கடலுக்குள் ஆழாமல் நீந்திக் கரைகாணவேண்டிய முயற்சிகளைச் செய்யவேண்டும் என்று ஆண்டவன் கரசரணுதி அவயவங்களைக் கொடுத்திருக்கிருன். ஆனுல் பிறவி யில் விழுந்தவர்கள் உடம்பைச் சதம் என்று எண்ணி, இந்திரியங்களுக்கு இரை போடுவதையே தம் வாழ்க் கையின் குறிக்கோளாக கினைந்து வாழ்நாள் முழு வதையும் வீணுக்குகிருர்கள். அதன் பயணுக மேலும் மேலும் பிறவியைப் பெற்றுக்கொண்டே வருகிருர்கள். பிறவியைப் பெற்றதன் பயன் இந்தப் பிறவியை ஒழிப் பதற்குரிய வழியைத் தேடுவதுதான். ஆளுல் மேலும் பிறவி உண்டாவதற்குரிய செயல்களேயே மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/80&oldid=855916" இலிருந்து மீள்விக்கப்பட்டது