பக்கம்:ஞான மாலை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ6 - ஞான மாலே குறைபாடு இல்லை. அவர்களே முத்தர்கள் என்று பெயரிட்டுச் சொல்வார்கள். கப்பலின் மேலே மிதந்து எந்தச் சமயத் திலும் வருகிற ஒடத்தில் ஏறிக்கொள்ளத் தகுதி வாய்ந்தவர்கள் பக்தர்கள். இறைவன் தன்னுடைய கருணை ஒடத்தில் அவர்களே ஏற்றிக்கொள்வான். - 'யாதும்நிலை அற்றலையும் ஏழு பிற விக்கடலை ஏறவிடும் நற்கருணே ஓடக்காரனும்' என்று திருவகுப்பில் பாடுவார் அருணகிரியார். ஆண் டவன் பல கருணத் தோணிகளே வைத்திருக்கிருன். கோயில்கள் என்றும், நூல்கள் என்றும், பெரியவர் கள் என்றும், உபதேசங்கள் என்றும் அங்தத் தோணி கள் பிரபஞ்பத்தில் மிதக்கின்றன. கடலின்மேலே மிதப் பாருக்கு அவை யாவும் பயன் தருகின்றன. யார் யார் எதை எதை அண்டிக்கொள்கிருர்களோ அந்த அந்த மிதப்பிலே அவர்கள் ஏறிக்கொள்வார்கள். இப்படி மேலே மிதக்கிறவர்கள் பக்தர்கள். பெத்தர்கள் - உள்ளே ஆழ்கிறவர்களே பெரும்பாலான மக்கள்; அவர்கள் பெத்தர்கள் அல்லது கட்டுக்கு உட்பட்டவர்கள். கடலின் மேல்பரப்பிலே எத்தனை தோணி இருந்தாலும் அவர்களுக்குப் பயன்படுவது இல்லை. ஆண்டவன் உயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு எத்தனையோ வகையில் துணை செய் கிருன். பல வகையான கருவிகளே நமக்குத் தந்திருக் கிருன். இந்த உடம்பில் வாழும்போதே இந்தப் பிர பஞ்ச வாழ்க்கையிலே அவனத் தெரிந்து கொள்வதற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/84&oldid=855920" இலிருந்து மீள்விக்கப்பட்டது