பக்கம்:ஞான மாலை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 67 கும், பக்தி பண்ணுவதற்கும் சிறந்த சாதனங்களே இயற்கையிலேயே அமைத்திருக்கிருன். ஆ ைல் அவற்றையெல்லாம் பக்தர்களே பயன்படுத்திக் கொள்கிருர்கள். மேலே மிதப்பாருக்கு அவை பயன் படுமே தவிர, கீழே ஆழ்ந்துகொண்டு போகிறவர் களுக்குப் பயன் இல்லை. - ஆண்டவன் கருணை உடையவன். அந்தக் கருணையைப் பயன்படுத்திக்கொள்கிற வாய்ப்பு இல்லாதவர்கள் கடலுக்குள் ஆழ்ந்து கொண்டே போகிருர்கள். மேலும் மேலும் பிறவி உண்டாவ தற்கு ஏற்ற காரியங்களேயே அவர்கள் செய்கிருர்கள். அவர்கள், "ஆண்டவனுக்குக் கண் இல்லையே! கருணை இல்லையே!” என்று புலம்புகிறர்கள். ஆண்ட வன் ஏதேனும் ஓர் உயிராவது மேலே மிதக்குமா என்று பார்த்து, மிதந்தால் தூண்டில்காரனப் போலச் சட்டென்று எடுத்துத் தன்னுடைய கருணைத் தோணியில் போட்டுக் கொள்ளக் காத்திருக்கிருன். அந்தத் தோணியில் ஏறிக்கொள்வதற்கு நீரின்மேல் மிதக்கவேண்டும். இப்போது மூன்று வகையினரைப் பார்த் தோம். கப்பலில் இருக்கிறவர்கள் ஜீவன் முத்தர்கள்." கடலின் மேல் பரப்பிலே மிதப்பவர்கள் பக்தர்கள். கடலுக்குள் ஆழ்கிறவர்கள் பெத்தர்கள் அல்லது பங் தத்தில் சிக்கினவர்கள். முத்தர்களும், பக்தர்களும் கடலில் ஆழாமல் இருக்கவும், பாச பந்தத்தினுல் சிக்குண்டவர்கள் ஆழ்வதற்குக் காரணம் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/85&oldid=855921" இலிருந்து மீள்விக்கப்பட்டது