பக்கம்:ஞான மாலை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - ஞான மாலே; கல்லைக் கரைத்தல் அதற்கு மிக எளிய வழி மனம் என்னும் கல்லைக் கரைப்பதுதான். மனத்தை நீராளமாகக் கரைத்து விட்டால் கீழே ஆழச்செய்கின்ற கல்லோடிருந்த உயிர் மேலே மிதக்கும். மிதக்கும் போதே பெத்தர்கள் பக்தர்களாகிவிடுகிருர்கள். இன்னும் தெளிவாகச் சொன்னுல் யாருக்கு மனம் கரை கிறதோ, யாருடைய மனம் உருகி இறைவனே கினைக்கிறதோ, அவர்கள் பக்தர்களாகிவிடுகிருர்கள் எனலாம். அவர்கள் இறைவனுடைய கருணையைப் பெறுவதற்குரிய கிலே யில் இருக்கிருர்கள். - கெஞ்சக் கன கல் உருகவேண்டும். உருகினல் பக்தி உணர்ச்சி தலைப்படும். அப்போது இறைவ னுடைய கருணையை ஏற்கும் நிலை உண்டாகும் என்று பார்த்தோம், - கல் உருகுமா என்ற கேள்வி உண்டாகும். உருகும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிருர் கள். வெப்பத்தினலே உருகாது. வேறு வகையாலே உருகாது. பாடினல் கல் உருகும் என்பதற்குச் சான் ருகச் சில வரலாறுகள் இருக்கின்றன. கல் பாட்டால் உருகுதல் பார்வதி கல்யாணம் கடந்தபோது கிலம் வடக்கே உயர்ந்துவிட்டதாம். பாரத்தைச் சரிசமம் ஆக்குவ தற்கு இறைவன் அகத்திய முனிவரை இமாசலத்தி லிருந்து தென்னுட்டுக்கு அனுப்பின்ை. இங்கே வந்த அகத்தியர் இந்த நாட்டின் வளங்களையும், இங்குள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/88&oldid=855924" இலிருந்து மீள்விக்கப்பட்டது