பக்கம்:ஞான மாலை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 7 f தமிழையும் கண்டு இங்கேயே இருந்துவிடலாம் என்று எண்ணினர். அப்போது தென்னுட்டை இரா வணன் ஆட்சி புரிந்துவந்தான். இராவணன் அரக்கன் ஆகையால் தம்முடைய தவம் முதலிய செயல்களுக்கு ஊறு உண்டாக்குவான் என்று அஞ்சினுர், அகத்திய முனிவர். அவனே ஒட்டிவிட்டால் தாம் தம் மனம் போல இருக்கலாம் என்று அவர் கினைத்தார். அவளுேடு போர் செய்து அவனை ஒட்டிவிடுவது என்பது முனிவரால் முடியாத காரியம். படையெடுத் துப் போர் செய்து விரட்டுவது ஒரு வகை. கலேப் போர் செய்வது ஒரு வகை. அகத்தியர் யாழில் வல்லவர். இராவணனும் யாழ் வாசிப்பதில் வல்லவன். யாழ் இசையில் இராவணனே வென்று விரட்டி விடலாம் என்று கினைத்து, அவனே அகத்தியர் யாழ் இசைப்போருக்கு அழைத்தார். கலையில் சிறப்பு உடையவர்கள் கலேப்போருக்கு அஞ்சமாட்டார்கள். இராவணன் ஒப்புக்கொண்டான், "வென்றவருக்கு என்ன பரிசு?’ என்று கேட்டார் அகத்தியர். நீங்கள் எது சொன்னலும் கேட்கிறேன்” என்று இராவணன் ஒப்புக்கொண்டான். "வென்றவர் இந்த நாட்டில் இருக்கவேண்டும். தோல்வி அடைகிறவர் இந்த நாட்டை விட்டுப் போகவேண்டும்” என்று இருவரும் பேசிக்கொண்டார்கள். - இருவரும் யாழ் வாசித்தால், யார் வாசிப்பது சிறந்தது என்று தீர்மானம் செய்வதற்கு ஒருவர் வேண்டுமே; இராவணன் செய்யும் கலேப் போரில் நடு நிலைமையில் நின்று தீர்மானம் செய்வது என்ருல் எல்லோரும் அஞ்சுவார்கள். ஆகையால் அசத்தியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/89&oldid=855925" இலிருந்து மீள்விக்கப்பட்டது