பக்கம்:ஞான மாலை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ஞான மாலே ஒரு தந்திரம் சொன்னுர். பொதிய மலை யாருடைய பாட்டுக்கு உருகுகிறதோ அவரே வென்றவர் என்று கொள்ளவேண்டும் என்று சொன்னர். அதையும் இராவணன் ஏற்றுக்கொண்டான். - அகத்தியர் பாடினர். பொதிய மலை உருகிவிட் டது. இராவணன் பாடும்போது அது உருகவில்லை. இசையில் தான் தோல்வியுற்றமையினுல் சொன்ன வாக்குப்படி இலங்கைக்குச் சென்று ஆட்சிபுரிந்தான் இராவணன். தொல்காப்பிய உரையில், 'இராவண னேக் கந்தருவத்தால் பிணித்து” என்று உரையாசிரி யர் எழுதுவர். இனிய பைங் தமிழின் பொதிய மால் வரைபோல் இசைக்குருகாது” என்று சிவப் பிரகாசரும் இந்தச் செய்தியை ஆள்வர். இந்த வர லாறு கல் இசைக்கு உருகும் என்பதைத் தெரிவிக் கிறது. இங்கே அருணகிரியார், 'நெஞ்சமாகிய கன கல் உருகுவதற்கு நான் பாட்டுப் பாடப் போகிறேன்” என்கிருர். - பக்தியின் இலக்கணம் நெஞ்சம் என்னும் கன கல் உருகில்ை பெத்தர் களாக இருப்பவர்கள் பத்தர்க ளாகிவிடுவார்கள் என்றேன். உருகுவது பக்திக்கு இலக்கணம். 'கினைந்து உருகும் அடியாரை கைய வைத்தார்' என்று அப்பர் சுவாமிகள் பாடுவர். "மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன் விரை ஆர்கழற்குளன் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி வெதும்பி உள்ளம் பொய் தான் தவிர்ந்துஉன்னைப் போற்றி சயசய போற் றிஎன்னும் கைதான் நெகிழ விடேன் உடை யாய்என்னைக்கண்டுகொள்ளே என்பது மணிவாசகர் திருப்பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/90&oldid=855927" இலிருந்து மீள்விக்கப்பட்டது