பக்கம்:ஞான மாலை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?3 - ஞான மாலே தோட்டி ஒருவன் மலம் நிறைந்த பாண்டம் ஒன்று வண்டியில் இருக்க முன்னுல் உட்கார்ந்து ஒட்டுகிருன். அப்போது வழியில் சென்ற பலாச் சுளேயை வாங்கித் தின்று கொண்டிருக்கிருன். அவனை நாம் பார்த்தால் பரிகாசம் பண்ணுகிருேம்: "பின்னுல் மலபாண்டம் இருக்கச் சற்றும் அருவருப்பு இல்லாமல் அவன் பலாச்சுளையை உண்ணுகிருனே!” என்று கேலி பேசுகின்ருேம். நாமே அந்த நிலையில் இருப்பதை மறந்துவிடுகிருேம். அவனே மலபாண் டம் வேறு, அவன் வேருக இருக்கிருன் காமோ உண்ணுகிற வாயும், மலம் நிறைந்த குடலும் ஒர் உடலிலே வைத்துக் கொண்டிருக்கிருேம். நாம் தரும் பொருள்தான் அந்தப் பாண்டத்தில் நிரம்பியிருக்கிற தென்பதை கினைத்துப் பார்க்கவேண்டும். அறுசுவை உண்டி உண்ணும்போது அவை யாவும் மலமர்க நம் உடலில் தேங்குகிறது. உண்டன மலமாம்" என்பர் பட்டினத்தார். இந்த மலபாண்டத்தை கினைந்து அருவருக்கத் தெரிவதில்லை. கண்ணுக்கு முன்னுல் இருப்பதைக் கண்டு 'சீ' என்று அருவருக் கத் தெரிந்த நமக்கு நம்முடைய உடம்பில் இருக்கும் அழுக்கையும், புழுக்களையும், மலத்தையும் எண்ணி அருவருக்கும் கிலே வருவதில்லை. மெய்ஞ்ஞானிகள் இந்த உடம்பை அருவ்ருப்பார்கள், அழுக்குச் சுமை சுமப்பது போல எண்ணி வருந்துவார்கள். - 'அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன்' என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுகிருர். உலக வாழ்வில் வாழும்போது நம்முடைய உடம்பும், உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/96&oldid=855933" இலிருந்து மீள்விக்கப்பட்டது