பக்கம்:ஞான மாலை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சக் கன கல் 79 மும் அழுக்காய் இருப்பதை எண்ணிப் பார்த்துக் கனத்திற்குக் கணம் நெகிழ்ந்து கொண்டிருக்க வேண்டும். நம்முடைய அவல நிலையையும், நம்மால் இதை மாற்றிக் கொள்ள முடியாமல் இருக்கும் வலி இன்மையையும் கினைந்து கினைந்து நெகிழ்வதற்கு வழிகள் இருக்கின்றன. ஆனல் காம் நெகிழ்வ உருகுதல் - - இனி உருகுவதைப் பார்க்கலாம். இறை வனுடைய பெரும் கருணையை நினைந்து உருக வேண்டும் என்று சொன்னேன். “இறைவனது கருணை எனக்குக் கிடைக்கவில்லையே! ஞானசம் பந்தர், அப்பர் சுவாமிகள் இவர்களுக்குக் கிடைத்தது போல எனக்குக் கிடைக்கும்படி ஆண்டவன் அருள் செய்தானு?’ என்று நமக்குத் தோன்றும். இறைவன். இனிமேல் கருணை செய்வது இருக்கட்டும். இது காறும் செய்த கருணையை கினைந்து உருகலாமே. இப்போது இந்த உலகத்தில் நடமாடும் இந்த உடம்பில் நல்ல கருவி கரணங்களையும், நாம் நடமாடு வதற்குப் பிரபஞ்சத்தையும்,நமக்கு உதவிசெய்வதற்கு உறவினர்களையும் நண்பர்களையும், காம் இன்பம் பெறுவதற்கு உணவு முதலிய பண்டங்களையும் அருளினவன் யார்? அவனுடைய கருணையினுல் அல்லவா காம் ஒவ்வொரு கணமும் வாழ்கிருேம்? நாம் - தூங்கினுலும், கடந்தாலும், கொட்டாவி விட்டாலும், வேலை செய்தாலும் எப்போதும் மூச்சு வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞான_மாலை.pdf/97&oldid=855934" இலிருந்து மீள்விக்கப்பட்டது