பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

ஞாயிறும் திங்களும்



வாழ்வினர், நிமிர்ந்த நடையினர், நேர்கொண்ட பார்வையர், அண்டிப்பிழையார், ஆர்த்த வாழ்வினர், ஒட்டார் பின் செல்லாதவர், நல்லாசிரியர், ஆசிரியர் போற்றுபவர், நன்றி மறவாதவர், நட்புப் பெரிதென வாழ்ந்தவர், பகுத்தறிவாளர், மனிதநேயர், பழகுதற்கினிய பண்பாளர், பிறர்க்குதவும் ஏந்தல், சாதி தொலைத்தவர், சமயம் அறுத்தவர், பதவி வெறுத்தவர், சமத்துவம் விரும்பி, விளம்பரம் விரும்பார், எளிமை வாழ்வினர், புகழ் கண்டு கூசுவார், அன்பு நெஞ்சினர், குழந்தை உள்ளத்தினர், பூமணத்தினர், இனிமைப் பேச்சினர், இளமை விரும்பி, அமைதி விரும்பி, குறிக்கோள் வாழ்வினர். இடர்பாடுகளும் இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல் தடம்புரளாத் தங்கமாக, தன்மானச் சிங்கமாக, தமிழ் வேழமாக, கொள்கைக் குன்றமாக வாழ்ந்தவர். பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமலும் அரசவைப் பதவிகள் நாடி வந்த போதும் அவைகளைப் புறக்கணித்தும் வளையா முடியரசர் என்றும் வணங்கா முடியரசர் என்றும் புகழ்பெற்றவர். தன்மானக் கொள்கையால், மைய, மாநில அரசின் பல அரிய விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் உணர்வாளர்களாக்கியவர், கனவிலும் கவிதை பாடுபவர். பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனாகவும், பாரதிதாசனைத் தந்தையாகவும் கருதிக் குலமுறை கிளத்தும் கொள்கையுடையவர். தமது வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை 6aᎢ6YᎢ ↑6ü பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் Савтти. குழுமிக் கெடுதிகள் குழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே தொகுப்பு கவியரசர் முடியரசனார் முத்தமிழ் மன்றம் ஈரோடு.