பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஞாயிறும் திங்களும்




சங்கே முழங்கு


சங்கே முழங்கு - வெற்றிச்
சங்கே முழங்கு - முச்

சங்கம் வளர்த்ததமிழ் எங்கும் தழைக்கவெனச்
- சங்கே

எங்கே வரும்படைகள்? எங்கே வரும்தடைகள்?

இங்கே புகும்பகைகள் எல்லாமே தூளென்று
- சங்கே

எங்கோ இருந்தவர்கள் இங்கே புகுந்தவர்கள்
இம்மா நிலத்துமொழி இரண்டாம் நிலைக்குவர
வெங்கோல் செலுத்துவதை நுங்கா[1] திருப்பதுவோ?

வெங்களம் கண்டுவரும் வேங்கைகள் யாமென்று
- சங்கே

மூடத் தனத்தைவிடு சாடக் களத்திலெழு
மூத்துப் பழுத்தமொழி காத்துப் புரந்திடென
ஆடிக் களங்கண்ட தாடிக் கிழப்பெரியர்

அய்யா உரைத்தமொழி மெய்யே எனப்புகலச்
- சங்கே
20-6-1979

  1. நுங்காது - அழிக்காது