பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

ஞாயிறும் திங்களும்


50 ஞாயிறும் திங்களும் | தமிழ்காத்த தலைவர் | செப்பும் மொழிபதி னெட்டுடையாள் என்றாலும் ஒப்புமனச் சிந்தனை ஒன்றுடையாள் பாரதத்தாய் என்றுரைத்தான் என்பாட்டன், ஏற்புடைய அக்கருத்தை ஒன்றுபடும் ஆற்றை உணரா வடபுலத்தார் செப்புமொழி ஒன்றென்றார் சிந்தனைகள் நூறாகத் தப்புவழி மேற்கொண்டார், தக்கார் பலர்கூடிச் செந்தமிழ்க்குத் தீங்கு சிறிதும் வரஒவ்வோம் இந்திக்குத் தென்னாட்டில் என்றும் இடமில்லை ஒற்றுமைக்குத் தீமை உருவாக்க எண்ணாதீர் பற்றுமக்குத் தாய்மொழியில் பாரித் திருப்பதுபோல் எங்களுக்கும் தாய்மொழியில் ஈடில்லாப் பற்றுண்டு பொங்கும் மொழியுணர்வைப் புல்லென் றிகழாதீர் என்றெல்லாம் கூறி இடித்துரைத்தும் கேளாராய்த் தென்றல் உலவுந் திருநாட்டில் இந்தியினை வன்பில் திணித்தார் வடபுலத்து வாழ்மாந்தர் அன்போ டுரைத்தும் அவர்செவியில் ஏறவில்லை நம்மை அடிமையென நாடாள்வோர் எண்ணியதால் வெம்மை வழியை விழைந்து திணித்தார்கள் பாரில் குடியரசுப் பண்பை எடுத்தெடுத்துக் கூறிப் பயனில்லை, கூடார் எனமாறிக் கொண்டதே கொள்கையெனக் கொட்டம் அடிக்கின்றார் கண்டும் பொறுத்திருந்தால் காலம் நமைப்பழிக்கும் போர்க்கோலம் பூணுங்கள் போற்றுங்கள் தாய்மொழியை யார்க்கும் அடிமையலோம் ஆளப் பிறந்தவர்நாம் கொன்று குவித்தாலும் கூட்டில் அடைத்தாலும் நின்றமரில் தோளை நிமிர்த்துங்கள் என்றெல்லாம் ஆர்ப்பாட்டப் * போர்ப்பாட்டை அண்ணன் முழங்கிஒரு போர்ப்பாட்டை கண்டு புறங்கண்டார் இந்தியினை ; செந்தமிழ் நாடாளச் செங்கோல் தனையேந்த வந்ததும் நம்தமிழ் வாழ வழிசெய்தார். எம்முடைய நாட்டில் இருமொழி போதுமென மும்மொழிக் கொள்கை முறிய வழிசெய்தார் செந்தமிழைக் காத்துச் சிறந்த தலைமகனைப் பைந்தமிழிற் பாடிப் பரவுவதே நம்கடமை நாம்வாழ வந்தவனை நல்லவனை வாழ்த்திடுவோம் தேன்பாயும் தீந்தமிழைச் சேர்த்து

  • போர்ப்பாட்டை - போர் நெறி