பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

ஞாயிறும் திங்களும்


54 ஞாயிறும் திங்களும் மறைமலையும் பாரதியும் திரு.வி.க.வும் மானமுள்ள புலவர்களும் விதைத்து வைத்த நிறைவிதைகள் முளைத்தெழுந்து பசுமை கண்டு நின்றிருந்த தமிழ்ப்பயிர்கள், இந்தி என்னும் உறைவெயிலின் வெம்மையினால் வாடுங் காலை, உழவருளங் களிப்பெய்த வந்த காஞ்சிப் பெருமுகிலை ஈரோட்டுப் *பொருப்பில் தோய்ந்து பெய்ம்மழையைத் தமிழ்மொழியால் வாழ்த்தி நிற்போம் கலைமலர்கள் பலபூத்துக் கொத்துக் கொத்தாய்க் கண்குளிர மனங்குளிரக் காட்சி நல்கும் பலவகைய புகழ்மணக்கும் கனிகள் நல்கும் பாடிவரும் தம்பியராம் தும்பி கட்கு நலமருவும் அறிவுத்தேன் சொரிந்து நிற்கும் நாவசைய மொழித்தென்றல் உலவி நிற்கும் உலகிலுளார் இன்பமுறக் குளிர்ச்சி நல்கும் உயர்சோலை காஞ்சியிலே வளர்ந்த தம்மா! அம்மலர்சூழ் சோலையில்தேன் பருகி நாளும் ஆயிரம்பல் லாயிரமாய்ப் பாடிப் பாடித் தும்பிபல பறத்திங்கு வளர்ந்த துண்டு தும்பிகளால் மகரந்தப் பொடிபரந்தே அம்புவியில் பலமலர்கள் பூக்கக் கண்டோம் அவற்றிலுறு நறுமணங்கள் பரவிச் சென்று மொய்ம்புடைய கோட்டை எலாம் மணக்கக் கண்டோம் மொய்த்திருந்து மக்கள்ெலாம் வியக்கக் கண்டோம். பகையென்றும் நட்பென்றும் பாரா வண்ணம் பழிவாங்கும் சிற்றறிவு சேரா வண்ணம் நகைமொழியால் மாற்றலரை ஈர்க்கும் வண்ணம் நாகரிக அரசியலை நடத்திக் காட்டி மிகுபுகழால் உயர்ந்தானை, எளியர் வாழ்வு மேலோங்கச் செய்தானை, எங்கள் எட்டுத் தொகைமொழியில் தோய்ந்தானை, பண்பு காக்கும் அரனாகிச் சூழ்ந்தானைத் தொழுது நிற்போம்

  • பொருப்பு - மலை