பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

ஞாயிறும் திங்களும்



பகையுளத்து மாந்தரையும் அன்பு காட்டிப் பண்படுத்தி அரவணைத்துக் காக்குங் கைகள் மிகையடுத்துக் கூறவில்லை, தமிழர் நாட்டின் மேலான மானத்தைக் காக்குங் கைகள் பகைஎடுத்தே எவர்வரினும் சீறி நின்று பாரதமாம் இந்நாட்டைக் காக்குங் கைகள் தொகையெடுத்த திட்டங்கள் தீட்டி நாட்டில் தோன்றுதுயர் துடைத்துநலம் காக்குங் கைகள் ஈரமிலா நெஞ்சத்தார் இட்ட தீயால் ஏங்குகிற எளியவரைக் காக்குங் கைகள் நேரமெலாம் தந்நலமே பேணிக் காத்த நெறியாளர் ஆட்சியிலே காணா நம்மை சேரவொரு நெறிமுறையைச் செய்து நாடு செழுமையுறப் படியளந்து காக்குங் கைகள் விரமெலாம் ஒருவிரலில் காட்டும் அண்ணா விழிப்போடு செங்கோன்மை காக்குங் கைகள்.