பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன்

65



செந்தமிழைக் காக்குமொரு கொள்கை பூண்டு சிறிவரும் மறக்குலத்தின் எழுச்சி கண்டோம் உந்துகளில் தமிழ்எழுதும் கைகள் கண்டோம் ஒர்ந்துணரின் இவற்றுக்குப் பின்னே நிற்ப தெந்தஉரு? காஞ்சிநகர் உருவம் அன்றோ? ஏந்தலவன் ஊட்டி விடும் உணர்ச்சி யன்றோ? எந்தவிதம் நோக்கினுமே அவன்றன் செய்கை இனியதமிழ் காக்கின்ற செயலே ஆகும். பெற்றெடுத்த தாய்நாட்டைத் தமிழ்நா டென்று பேர்சொல்ல வைத்தவன்யார்? வாய்மை வெல்லும் பெற்றிமைக்குக் கோட்டைமுகம் சான்று சொல்லும் பெரியார்முன் உந்திவிட்ட இந்திப் போரில் உற்றமுதற் படைத்தலைவன் இவனே யன்றோ? ஓயாமல் அன்றுமுதல் இன்று காறும் பற்றகத்துக் கொண்டுமொழிப் போரில் நிற்போன் பைந்தமிழ்க்குக் காவலனாய் விளங்கக் கண்டோம். பெரியாரே எனக்கென்றும் தலைவ ராவார் பிறிதொருவர் தலைவரெனக் கொள்ளேன் என்றே அறிவாளன் நம்அண்ணன் உறுதி பூண்டான் அத்தலைவர் தமிழ்மொழியைப் பழித்த போதும் சரியான மறுப்புரைக்கத் தவற வில்லை தாய்மொழிக்குக் காவலன் தான் அய்யம் இல்லை விரிவான உலகெங்குந் தமிழ்ம ணக்க விழைகின்றான் அதற்குரிய செயலும் செய்தான். சட்டங்கள் பிறகலைகள் தமிழில் ஆக்கத் தலைப்படுங்கால் மனம்பொறுக்கா உளுத்துப் போன விட்டங்கள் ஏதோதோ உளறிக் கொட்டும் வெற்றுரைக்குச் செவிசாய்க்கா வண்ணம் நல்ல திட்டங்கள் பலதிட்டித் தமிழ்வ ளர்க்கும் தீரனவன் தாய்மொழியைத் தாழ்த்திப் பேசிப் பட்டங்கள் பெற்றவரும் திருந்தி வந்து பைந்தமிழைப் போற்றிடவே செய்த நல்லோன்.